பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/274

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

258

அணுவின் ஆக்கம்



எதிர்காலத்தில் மருந்துப் பொருள் உற்பத்திப் பண்ணையிலும், உணவுப் பொருள் உற்பத்திப் பண்ணையிலும் அணுவாற்றலைப் பயன்படுத்துவதில் பல வியத்தகு முன்னேற்றங்கள் ஏற்படும் என்பதற்குச் சிறிதும் ஐயம் இல்லை. உயிரியல் துறையிலும் மருத்துவத் துறையிலும் பல முன்னேற்றங்கள் காணப்படுவது போல், உழவுத் துறையிலும் பல முன்னேற்றங்கள் விரைவில் தென்படும். இன்று பலரும் ஒரளவு வெறுத்துத் தள்ளும் உழவுத்தொழில் பலரும் விரும்பியேற்கும் தொழிலாக வளரும் என்பதை நாம் நிச்சயம் எதிர்பார்க்கலாம்.