பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/286

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

270

அணுவின் ஆக்கம்



பொருள்களின் திறன்களைச் சோதிக்க : உற்பத்திச் சாலைகளில் சில பொருள்களின் திறன் கதிரியக்க ஒரிடத்தான்களால் சோதிக்கப் பெறுகின்றது. எடுத்துக்காட்டாக, சோப்பின் கழுவு திறன் எவ்வாறு கணக்கிடப் பெறுகின்றது என்பதைக் காண்போம். இதில் பாக்டீரியா என்ற நுண்ணுயிர்கள் கதிரியக்கக் கிளர்ச்சியுள்ளவைகளாகச் செய்யப் பெறு ன்றன. நுண்ணணுப் பெருக்கியின் துணையாலும் காண முடியாத இவ்வுயிர்களே அவை கதிரியக்கக் கிளர்ச்சி பெறுங்கால் கைகர் எண் - கருவியால் கண்டறிந்து விடலாம். துணிகளில் கதிரியக்கக் கிளர்ச்சியுள்ள பாக்டீரியாக்களைச் சேர்த்து ஒவ்வொரு துணியையும் வெவ்வேறு சோப்பினால் கழுவுதல் வேண்டும். கழுவிய பிறகு துணியில் எஞ்சி நிற்கும் பாக்டீரியாக்களே அளந்தால் சோப்பின் கழுவு திறனே அறியலாம்.

வண்ணப் பூச்சுக்கள், தரை மெழுகுகள் முதலியவற்றின் நாட்பட உழைக்கும் திறனைச் சோதிக்கவும், குருதிப் பிளாஸ்மாவில் நுண்ணுயிர் அழிப்புச் செய்யவும், 'கிரீம்கள் ' எனப்படும் முகத்தில் தடவும் பசைகளின் உறிஞ்சு திறனைச் சோதிக்கவும், இவைபோன்ற வேறு பயனுள்ள நூற்றுக் கணக்கான வழிகளை ஆராயவும் கதிரியக்க ஓரிடத்தான்களைக் கொண்டு சோதனைகள் நிகழ்த்தப்பெறுகின்றன.

நீர்ப்பாசனக் கால்வாய்களில் ஒருவித நீர்ப்பூண்டுகள் நீரோட்டத்தைத் தடைசெய்கின்றன. அவற்றை அழிப்பதற்குப் பயன்படும் ஒரு களை - கொல்லி[1]21 எவ்வளவு திறனுடையது என்பதைச் சோதிப்பதற்கு அமெரிக்க ஐக்கிய நாட்டு நிலமீட்சிக் கழகம்[2]22கதிரியக்க ஓரிடத்தான்களைப் பயன்படுத்தியது. கதிரியக்கக் கார்பனேத் தொடுத்துள்ள, ஒரு களை-கொல்லியைப் பயன்படுத்தி அது நீர்ப் பூண்டினுள் செல்லும் வழியை அறிவியலறிஞர்கள் கவனித்தனர். இதனால் அவர்கள் நீர்ப்பாசனக் கால்வாய்களில் இடையூறாக


  1. 21களை கொல்லி - weed -killer
  2. 22நில மீட்சிக்கழகம் - Reclamation Bureau.