பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/290

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

274

அணுவின் ஆக்கம்



தானோடித்32 " தொழிற்சாலைகளிலும் அ வ ற் றி ன் ஆராய்ச்சி நிலையங்களிலும் இம் முறை பெருவழக்காக உள்ளது. வழுக்கிடு பொருளைச் சீருடையதாகச் செய்வதற்குப் பெட்ரோலியம் தொழிற்சாலைகளிலும் இம் முறை மேற்கொள்ளப் பெறுகின்றது. கதிரியக்க ஒரிடத்தான்களேப் பெருவழக்காகப் பயன்படுத்திவரும் கலிபோர்னிய ஆராய்ச்சி நிலையம் இம் முறையில் செலவு குறையும் எனக் கண்டறிந்துள்ளது, பழைய முறையில் சோதனை செய்யவேண்டிய பகுதியை முதலில் நிறுத்து அதன் எடை காணப்பெறும், சிறிது காலம் ஒடிய பிறகு மீண்டும் அப்பகுதியின் எடை தீர்மானிக்கப்பெறும். எடை வேற்றுமையிலிருந்து தேய்மானம் கணக்கிடப்பெறும். இதனுல் பொறியிலிருந்து மேற்படி பகுதியை நீக்குவதற்கு ஆகும் காலம், மீண்டும் அதனைப் பொருத்துவதற்கு ஆகும் காலம், ஒரு மாத காலத்திற்கு மேற்படி பொறி இயங்காதிருப்பதால் ஏற்படும் நஷ்டம் ஆகியவற்றால் செலவு அதிகமாகும். கதிரியக்க ஒரிடத் தான் முறையில் ஒரு சில மணி நேரச் செலவுதான் ஏற்படும் ; கிடைக்கும் எடுகோள்களும்33 நம்பத் தகுந்தவையாக உள்ளன. இக்கம்பெனி இம்முறையை மேற்கொண்டு நான்கு ஆண்டுகளில் 85,000 டாலர் செலவில் ஊடியங்கி ஆராய்ச்சி செய்தது. இத்திட்டத்தைப் பழைய முறைகளை மேற்கொண்டு செய்தால் அறுபது ஆண்டுகளிலும் 1,000.000 டாலர் செலவிலும்தான் நிறைவேற்ற முடியும் என்று அக்கம்பெனியார் கணக்கிட்டுள்ளனர்.

வேறு உராய்வுச் செயல்கள் : கதிரியக்க ஓரிடத்தான் யுக்திமுறை34 தானோடித் தொழிற்சாலைகளிலும் வேறு தொழிற்சாலைகளிலும் தளவாடங்களின்35 தேய்மானத்தை அளப்பதிலும், டயர் பட்டன்களின் தேய்மானத்தை அளப்பதிலும் பயன்படுத்தப்பெறுகின்றது. அமெரிக்காவிலுள்ள சில கம்பெனிகள் இயந்திரங்களே வெட்டும் கருவிகளின் தேய்மானத்தையும் அவற்றின் ஆயுட்காலத்தையும் அளப்-


32தானோடி - automobile 33data - எடுகோள் 34யுக்திமுறை - technique 35 தளவாடம் - gear