பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/305

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிர்காலத்தில் அணுவாற்றல் リ

ஒரு சாதனம் இயற்றப்படும் என்றும் எதிர்பார்க்கப்ப்ெது கின்றது. அண்மையில் வெளிவந்த அணுவாற்றல் குழுவின் அறிக்கை யொன்ருல் இத்தகைய சாதனம் இன்னும் பத்து ஆண்டிற்குள் இயற்றப்படும் என்றும் அறிகின்ருேம். அறிவியலறிஞர்களும் பொறியியல் வல்லுநர்களும் தம் வளர்ச்சி வேலையில் திடீரென்று கொள்கையை மாற்றிக் கொண்டு புதிய உண்மைகளைக் காண்பார்களாயின், இத்துறையில் முன்னேற்றம் இன்னும் விரைவில் ஏற்பட் டாலும் ஏற்படலாம். இப்பொழுது அமெரிக்காவில் ஒரு கம்பெனியில் செய்யப்பெற்ற சோதனை இயந்திர அமைப்புத் திட்டத்தில் குழல்கள், வால்வுகள், திறந்தவெளிகள் முதலி யவைகளின்றி ஒர் அணு இயந்திரம் அமைத்திருக்கின்றனர். இதனுல் அவ் வியந்திரத்தின் எடை வழக்கமாக இருக்கும் இயந்திரத்தின் எடையில் பாதியளவுக்குக் குறைந்திருக் கின்றது. அணு இயந்திரத்தின் உள்ளகத்தை " ஒர் உருளை வடிவமான சூடுமாற்றியினுள் " வலக்கண்போல் அமைத்து இயந்திரத்தின் அளவையும் கனத்தையும் குறைத்துவிட முடியும் என்று அவர்கள் கண்டறிந்துள்ளனர்.

இத்தகைய விமானத்தில் அணுவாற்றலால் இயங்கும் எந்த வகை இயந்திரத்தைப் பயன்படுத்துவதென்பது ஒரு முக்கிய பிரச்சிகனயாகும். அமெரிக்காவிலுள்ள விமானம் செய்யும் கம்பெனி ஒன்றிலுள்ள விமானப் பொறியியல் நிபுணர் ஒருவர் மூன்றுவிதமாக இதனைச் சமாளிக்கலாம் என்று சோதிடம் கூறுகின் ருர். அணு உலையிலிருந்து “ தோன்றும் ஆற்றலக்கொண்டு ஒரு டர்ப்போஜெட் இயந் திரத்தையோ," ஒரு டர்ப்போபுராப் இயந்திரத்தையோ' அல்லது ஒரு ராக்கெட் மோட்டாரையோ " இயங்கச் செய்யலாம். அணுப் பொறிகளுக்குக் காப்புறை அமைத்தல் போன்ற பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப் பெற்றுவிட்டால், மனே வேகத்தை யொத்த வேகத்தில் செல்லவல்ல ஆட்கள்,

  • @ sirés Gih - core. * (50tprij - heat exchanger** so; go go &o - reactor. " டர்ப்போஜெட் இயந்திரம் - turbojet engine, “ -fi'i(SLIrusts, souñāorih - turboprop engine. “ Trägålo Gunrlit-rf-rocket motor.

53-20