பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/322

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

306

அணுவின் ஆக்கம்



உணவு - உழவுக் கழகம் : உணவுத் - துறையிலும் உழவுத் துறையிலும் கதிரியக்க ஓரிடத்தான்கள் எவ்வாறு பயன்படுகின்றன என்பதைப்பற்றி ஒரு சில தகவல்களை முன்னர்க் கண்டோம். ஐ. நா. சபை கதிர்வீச்சுக்களின் பயன்களையும் கதிரியக்க ஓரிடத்தான்களின் பயன்களையும் மூன்று பிரிவுகளாகப் பிரித்துள்ளது. முதலாவது, உழவுத் தொழில் முறையும் உணவுப் பாதுகாப்பும். இதில் சூடாக்காமல் உணவை ஸ்டெரிலைஸ் செய்து பாதுகாக்கக் கதிர்கள் பயன்பெறுகின்ற்ன. இறைச்சியும் மீனும் இங்ஙனம் பாதுகாக்கப் பெறுகின்றன. களஞ்சியத்திலுள்ள தானியங்கள் சிறு வண்டுகளாலும் பிறவகைப் பூச்சிகளாலும் கேடுறாவண்ணம் இம் முறையில் காக்கப் பெறுகின்றன. இரண்டாவது, தாவர, பிராணிகளின் பெருக்கம். கதிரியக்க ஓரிடத்தான்களின் கதிர்களைப் பயன்படுத்திக் குடிவழிப் பண்புகளேயே மாற்றிப் புதிய, உயர்ந்த ரகத் தாவரங்களையும் பிராணிகளையும் படைக்கின்றனர். உயர்ந்த ரகத் தானிய வகைகளும், பட்டாணி வகைகளும் ஏற்கனவே உண்டாக்கப் பெற்றுள்ளன. மழை பெய்வதற்கேற்றவாறும் நிலவூட்டத்திற்கேற்றவாறும் அனுசரித்துக் கொள்ளக் கூடிய நவீன தானிய வகைகளும் உண்டாக்கப் பெற்றுள்ளன. மூன்றாவது, வழி-துலக்கி ஆராய்ச்சி: இது பயிர் வளர்ச்சி, பிராணிகள் பாதுகாப்பு, மீன் பண்ணை ஊட்ட ஆராய்ச்சி ஆகிய துறைகளில் வெற்றிகரமாகக் கையாளப் பெறுகின்றது.

அணுவாற்றலிலிருந்து மின்னாற்றல் அதிகமாக உற்பத்தி செய்யப் பெறுவதற்கேற்ப, உழவுத் தொழில் அபிவிருத்தி அடையும்; சிற்றூர்களும் நவீன வசதிகளனைத்தினையும் பெறும். அவ்வாற்றல் பொருள்களின் விலையைக் குறைக்கும்; வேலை செய்து உழைப்பவர்களுக்கு உதவியாகவும் இருக்கும்; சிற்றூர் மக்களின் வாழ்க்கைத் தரத்தைப் பெரிதும் உயர்த்தும். அணுவாற்றல் பொறிகளைக் கொண்ட கலங்களைக் கொண்டு மீன் வேட்டை, திமிங்கல வேட்டைக்குச் செல்லலாம்; இதனால் பலனும் அதிகமாகக் கிடைக்கும்; செலவும் குறையும். குறைந்த விலைக்கு அதிக மின்னாற்றல் கிடைப்பதால் காடுகளில் அங்கு கிடைக்கும் விளைபொருள்-