பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/339

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பின்னிணைப்பு - 2

323


சுழலினி (cyclotron) : ஆற்றல் வாய்ந்த ஒர் இயந்திரம். இதில் நேர் இயல் மின்னிகள் போன்ற மின்னூட்டம் பெற்ற உட்கருத் துணுக்குகள் ஒருமின் காந்தத்தின் இரு துருவங்களுக்கும் இடையே படுக்கைவசமாக அமைந்துள்ள சுருள் வழியே சென்று ஒவ்வொரு வழியில் செல்லும்பொழுதும் கூடிய (additional) விசையைப் பெற்று ஆற்றல் வாய்ந்த எய்பொருள்களாக (projectiles) வெளிப்படும். இவைதாம் உட்கருவினைத் தாக்குவதற்குப் பயன்படுத்தப் பெறுகின்றன. இவை உட்கரு அமைப்பின் ஆராய்ச்சியிலும் உட்கரு-வினைகளிலும் பயன்படுகின்றன.

தணிப்பான் (moderator): பக்குவிடுதல் நடைபெறும் பொழுது வெளிப்படும் பொது இயல் மின்னிகளின் வேகத்தைக் குறைத்து அவை மேலும் மிகுதியாகத் திறனுடன் பக்குவிடச் செய்வதற்கேற்ற வேகத்தில் வைத்து தொடர் நிலை இயக்கம் நடைபெறத் துணையாக இருப்பதற்கு அணு உலையில் உபயோகப்படும் ஒரு பொருள். எ-டு பென்சில்கரி யுரேனிய அடுக்கில் உபயோகப்படும் ஒரு தனிப்பான்.

தொடர்நிலை விளைவு (chain reaction) : இது வேதியற் கிரியை. தொடக்கி விட்டுவிட்டால் அது தேவையான ஆற்றலை உற்பத்தி செய்துகொண்டு தானாக நிலை பெறச் செய்துகொள்ளும். அதனால் கிடைக்கக் கூடிய முழுப் பொருளையும் எரித்துவிடும். எந்த வெடித்தலும் இதற்கு ஒரு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். ஆனல், பொது இயல் மின்னியின் தாக்குதலால் நடைபெறும் தொடர்நிலை இயக்கம் இவ்வாறு நடைபெறுகின்றது : ஒர் ஒற்றைக் கரு பக்குவிட அதிலிருந்து வெளிப்படும் பொது இயல் மின்னிகள் அண்மையிலுள்ள உட்கருக்களைப் பக்கு விடச் செய்கின்றன. இச்செயல் தொடர்ந்து நடைபெறுகின்றது ; இது பெருவிசையுடன் நடைபெறும்.

நியுட்ரினே (nutrino) : எதிர் மின்னியைப் போன்ற மிகச் சிறிய துணுக்கு. இதற்கு எடையும் இல்லை; மின்னூட்டமும் இல்லை. இது இன்னும் கொள்கையளவில்தான்