பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணுவின் அமைப்பு

35


60ஜெனான்,60 ரேடான்61 என்ற சோம்பேறிக் கூட்டத்தைச் சேர்ந்தவை யாவும் பிற பொருள்களுடன் சேர்வதில்லை. இவற்றின் புறவட்டங்கள் 8 எதிரியில் மின்னிகள் நிறைந்த நிலையில் உள்ளன.

உட்கரு அமைப்பு: இரண்டு வகைச் செங்கல்களால் கட்டப்பெற்ற வீடுபோல், எல்லா அணுக்களின் உட்கருக்களும் நேர் இயல் மின்னிகள், பொது இயல் மின்னிகள் என்ற இரண்டு வகைத் துணுக்குகளால்தான் அமைந்திருக் கின்றன. உட்கருவின் செறிவும் எம்மருங்கும் ஒருபடித்தாகவே62 இருக்கின்றது. இந்தத் துணுக்குகள் யாவும் மிக இறுகப் பிணைக்கப் பெற்றுள்ளன. நாம் அறிந்த ஆற்றல்கள் எல்லாவற்றிலும் இவை பிணைந்திருக்கும் ஆற்றல்கள் மிகப் பெரியவை. இந்த ஆற்றலை உட்கருவின் பிணப்பாற்றல்63 என்று வழங்குவர். அணுக்களிலுள்ள எதிரிமின்னிகளுக்கும் அவற்றின் உட்கருக்களுக்கும் இடையேயுள்ள மின்னாற்றலை விட இவ்வாற்றல் பத்து இலட்சம் மடங்கு பெரிது வன்மையும் வாய்ந்தது. இந்த ஆற்றலின் இயல்புகளையும் தன்மைகளையும் விளக்கும் பொருட்டு அறிவியலறிஞர்கள் பல கோட்பாடுகளே வெளியிட்டுள்ளனர். ஆயினும், அவற்றுள் ஒன்ருவது இதுகாறும் அறியப்பெற்றுள்ள செய்திகள் அனைத்தையும் விளக்கவல்லது அன்று.

பின்னக் கணக்கு : நீரிய அணுவில் ஒரு நேர் இயல் மின்னியும் ஓர் எதிர்மின்னியும் உள்ளன என்று மேலே கூறினோம். எதிர்மின்னியைவிட நேர் இயல் மின்னி 1840 மடங்கு எடை மிக்கது என்றோம். இந்த எடையை நோக்க எதிரிமின்னியின் எடையைப் பொருட்படுத்த வேண்டியதில்லை. எனவே, நீரிய அணுவின் எடையும் நீரிய உட்கருவின் எடையும் சமம் என்று கொள்வதில் தவறில்லை. இந்த நீரிய அணுக் கருவே எல்லாவகை அணுக்களுக்கும் அடிப்படை. இந்தக் கருவின் எடை 1.00818 என்று தராதர எடைக் கணக்கில்


60ஜெனான்-zenon 61ரேடான் - radon,{{sup|62}ஒருபடித்தாக -homogeneous 63உட்கருவின் பிணைப்பாற்றல்-biniding energy of the nucleus