பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

அணுவின் ஆக்கம்


றுள்ளது என்பதைக் கூறவாவேண்டும்? அக்கல் பெற்றுள்ள குறைவான வாய்ப்பினைத்தான் யுரேனியக் கருக்களினிடையே வீசப்பெறும் எதிர்மின்னியும் பெற்றிருக்கும். எனவே, யுரேனியப் பிளவின்பொழுது வெளிப்படும் பொது இயல் மின்னிகளில் மிகச் சிறுபகுதியே கருக்களைத் தாக்கித் தொடர்நிலை விளைவில் பங்குகொள்ளும். யுரேனியத்தின் அளவு அதிகமானால் தாக்கப்பெறும் கருக்களின் எண்ணிக்கையும் ஓரளவு அதிகமாகும்.

இத் தொடர்நிலை விளைவு நிகழ்வதில் இன்ளுெரு தடையும் உள்ளது. இயற்கையில் கிடைக்கும் யுரேனியத்தில் இவ்விளைவு நிகழாது. இயற்கை யுரேனியம் இரண்டு ஒரிடத்தான்களின் கலப்பாகும். முதல்வகை, அஃதாவது யு-238 தான் அதிகமாக உள்ளது (99.7%). இரண்டாவது வகையாகிய யு-285, 0.7% தான் உள்ளது ; அஃதாவது 140-ல் ஒரு பங்கு உள்ளது. அதிகமாகவுள்ள யு-288ல் பிளவு22 நிகழ்வதில்லை. இதனுலும், பொது இயல் மின்னிகள் பிளவு நிகழ்த்தும் வாய்ப்புக் குறைகின்றது. மேலும், யுரேனியத்துடன் வேறு பொருள்கள் அசுத்தங்களாகக் கலந்திருந்தாலும் அவற்றை அடையும் பொது இயல் மின்னிகளும் பிளவினை நிகழ்த்தாது. எனவே, தொடர்நிலை இயக்கம் நடைபெறுவதற்குத் தூய்மையான யு-285-ஐத் தான் பயன்படுத்த வேண்டும். இயற்கை யுரேனியத்தினின்றும் இதனைப் பிரிப்பது அருமையினும் அருமை. பெருஞ் செலவில் இது நடைபெற வேண்டும்.

இத்தொடர்நிலை விளைவில் இன்னொரு சிறப்பும் உண்டு. மெதுவாகச் செல்லும் பொது இயல் மின்னிகளே அனுப்பிளவில் அதிகமாக ஈடுபடுகின்றன. எனவே, விரைவான பொது இயல் மின்னிகளின் வேகத்தை ஏதாவதொரு வகையில் கட்டுப்படுத்தி விட்டால், அவையும் அனுப்பிளவில் தொடர்ந்து ஈடுபடக்கூடும். கரி, போரன் முதலியன இலேசான பொருள்களிலும் நீரின் அண்ணனை கனநீரும், பென்சில்கரியும்23 பொது இயல் மின்னிகளின் வேகத்தைத்


22 பிளவு. பக்குவிடுதல்-fission. 23 பென்சில்கரி-.graphite