பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருவிலடங்கிய ஆற்றலும் தொடர்கில விளைவும் 33

மின்னி நேர் இயல் மின்னியாக மாறுகின்றது. எனவே, 147 பொது இயல் மின்னிகள் 146 பொது இயல் மின்னிகளாகக் குறைகின்றன. புதிதாக உண்டான நேர் இயல் மின்னி முன்னிருந்த 92 நேர் இயல் மின்னிகளுடன் சேரும் ; இப்பொழுது மொத்தம் 98 நேர் இயல் மின்னிகளா கின்றன. இதனுல் நேர் மின்னூட்டம் 93 ஆகிறது. நேர் மின் னுாட்டம் மாறிஞல் அணுவே மாறும்; இப்பொழுது ஒரு புதிய தனிமம் உண்டாகிறது. இதனை நெப்டுனியம் என்று பெயரிட்டு வழங்கினர் அறிவியலறிஞர்கள். இப் பொருள் கதிரியக்கம் வாய்ந்தது. இதுவும் உலகினே விரும்பவில்லை. இரண்டு நாட்களில் இப் புதுப் பொருளினின்றும் ஒர் எதிர் மின்னி குதித்து ஒடுகிறது ; காமா - கதிர்களும் வெளிப்படு கின்றன. மேலே கூறியவாறு பொது இயல் மின்னிகளின் எண்ணிக்கையில் ஒன்று குறைய, நேர் மின்னூட்டம் ஒன்று உயர்ந்து புளுட்டோனியம் என்ற பெயருடன் ஒரு புதிய அணு அவதரிக்கின்றது. இது நிலைத்த தன்மை யுடையது ; சிறிது கதிரியக்கம் வாய்ந்தது. இதன் அரைவாழ்வு 24000 ஆண்டுகள் என்று கணக்கிட்டுள்ளனர். பின்வரும் சமன்பாடுகளால் மேலே கூறிய கிரியைகளே ஒருவாறு விளக்கலாம் :

...U*--on' آیه حجس{ ***

(23 கிமிடம் கழித்து)

)p' + (-a)eo ro- (i)+( حتی سس : ri , U* سبب - سسسسسسس „Np°* 十 (-)e" امامت جمجمه بیسماجتمام {ii)

(இரண்டு நாட்கள் கழித்து)

on' سياس-------سسسه (...)p" + (-)e" - (i) *:Np*** -جزی،سست۔--سی „Puo* 十 (—)eo --- 《诅)

இவற்றில் U-யுரேனியம்; n-பொது இயல் மின்னி; p-நேரியல் மின்னி; e-எதிர் மின்னி; Np-நெப்டூனியம்; Pr

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அணுவின்_ஆக்கம்.pdf/85&oldid=599395" இலிருந்து மீள்விக்கப்பட்டது