பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கருவிலடங்கிய ஆற்றலும் தொடர்நிலை விளைவும்

77


பாதுகாப்பு முறைகள் : அணுவாற்றலைப் பயன்படுத்தும் தொழிற்சாலைகளில் மறலிக் கதிர்களினின்றும் தொழிலாளிகளைப் பாதுகாத்தல் ஒரு முக்கிய பிரச்சினையாகின்றது. யுரேனிய அடுக்கிலிருந்து வெளிவரும் கதிர்களைத் தடுத்து அவை இயந்திரங்களையும் தொழிலாளிகளையும் பாதிக்காதவாறு காப்புறைகள் இடப்படுவதன் அவசியத்தை மேலே கண்டோம். ஹான்போர்டு புளுட்டோனியத் தொழிற்சாலையில் 30,000 பேர் வேலை செய்தனர். கதிர்கள் வெளியில் பரவாதிருக்க ஐந்தடிப் பருமனுள்ள கப்பிச்சுவர்களும்36 இரும்புச்சுவர்களும் எழுப்பப் பெற்றிருந்தன. காப்புறைகளின் எடையே பல நூறு டன்கள் ஆகும். எனவே, யுரேனியத்தைப் பயன்படுத்தும் தொழிலகம் பேரளவினதாக இருக்கவேண்டும்.

அடுக்கு முழுவதையும் இங்ங்ணம் மூடி மறைத்தல் என்பது நடைமுறையில் சாத்தியம் இல்லே. காரணம், உள்ளிருக்கும் அடுக்கை வேண்டியவாறு அமைக்கவும் பிரிக்கவும் வசதிகளைப் பொருத்தவேண்டியிருந்தது. குளிர்ந்த நீர் உள்ளே பாய்ந்து வெளிவருவதற்கும் வழிவிடவேண்டியிருந்தது. இந்த அரண் சுவர்கள் உள்ளிருந்து வீசும் கதிர்களை மட்டிலும் தடுத்தால் போதாது. உள்ளிருந்து வெளிவரும் காற்றையும் தடுத்தாகவேண்டும். ஏனெனில், அங்கு நிகழும் கதிரியக்கக் கிளர்ச்சியால் காற்றும் கதிரியக்கம் பெற்று தீங்கு பயக்கக்கூடிய தாகிவிடும். இவற்றையெல்லாம் மனத்திற்கொண்டு தக்க பாதுகாப்பு முறைகள் அமைக்கப் பெற்றன. மேற்படி தொழிற்சாலையில் தொழிலாளிகளின் உடல்நலம் சிறிதும் குன்ருது பாதுகாக்க மருத்துவ உடல்நலப் பிரிவு ஒன்று அமைக்கப்பெற்றது. இதில் பணியாற்றும் மருத்துவ நிபுணர்கள் அனைவரையும் அடிக்கடி விவரமாய்ப் பரிசோதித்து அங்குள்ளோர் ஒருவகைத் தீங்கையும் அடையாது பாதுகாத்தனர்.

இன்னொரு முக்கிய பிரச்சினையும் எழுகிறது. யுரேனியத் தொழிற்சாலைகளிலுள்ள கழிவுப் பொருள்களே என்ன செய்வது என்பது ஒரு பெரும் பிரச்சினையாக இருக்கிறது.


57 கப்பிச்சுவர்கள் - concrete walls.