பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

அணுவின் ஆக்கம்


 வேலையை நடத்தினார். இரண்டாவது பெரியபடிவு 1915-ல் கண்டறியப் பெற்றது; இது பெல்ஜியன் காங்கோ[1] பிரதேசத்திலுள்ள பிரசித்தி பெற்ற ஷிங்கோ லோப்வி சுரங்கமாகும்[2] இறுதியாக, 1930-ல் கனடாவின் வடமேற்குப் பகுதியில் ஆர்க்டிக் வட்டத்தை[3] நெருங்கியுள்ள பெருங்கரடி ஏரிக்[4]கருகில் ஒரு பெரிய யுரேனியப் படிவு கண்டறியப் பெற்றது. காங்கோப் பகுதியிலும் கனடாப் பகுதியிலும் உள்ள கனிப் பொருள்களில் அதிகமாக யுரேனியம் உள்ளது. இப்பொருள்கள் ஒரு கடல் துறைமுகம் அல்லது புகைவண்டிப் பாதையை அடைவதற்கு முன்னர் ஆயிரத்திற்கு மேற்பட்ட மைல்கள் ஆறுகளில் செல்லும் நீராவிக் கப்பல்களில் கடத்தப் பெறுகின்றன.

புதிய மூலங்கள் : யுரேனியத்தின் இரண்டாவது பெரிய மூலம் கார்னோடைட்[5] போன்ற மிகச் சிக்கலான தனிப் பொருள்களில் உள்ளது. இவை சிறுசிறு குவியல்களாகக்[6] காணப்பெறுகின்றன. அவை அமெரிக்க ஐக்கிய நாடுகளிலுள்ள உயர்ந்த வறண்ட[7] கொலராடோ பீடபூமி[8]யிலுள்ள பரந்த மணற்கற்களின் அடுக்குகளில் விரிந்த நிலையில் சிதறிக் கிடக்கின்றன. இவை ரேடியத்தின் முலங்களாகப் பயன்படுத்தப் பெற்றன. பெல்ஜியன் காங்கோ பிரதேசத்திலுள்ள நல்ல படிவுகளைக்கண்டு அவற்றைச் சிறப்பானவைகளாகச் செய்யும் வரையில், அவை உலகத்திற்கே ரேடியத்தின் வினியோக மூலங்களாக இருந்தன. அண்மையில் யுரேனியம் அவசரமாகத் தேவை என்று ஏற்பட்டதும், 130,000 சதுரமைல்கள் பரப்புள்ள பீடபூமி முழுவதிலும் சிதறிக்கிடந்த இந்த கார்னோடைட்டின் சிறு குவியல்கள் தேடப்பெற்றன ; அவை ஏராளமாகவும் கிடைத்தன்.


  1. 15 பெல்ஜியன் காங்கோ - Belgian Congo.
  2. 16 ஷிங்கோ லோப்வி சுரங்கம்.Shinkolobwe mine.
  3. 17 ஆர்க்டிக் வட்டம் - Arctic circle.
  4. 18 பெருங்கரடி ஏரி- Great bear lake.
  5. 19கார்னோடைட் - cornotite
  6. 20 சிறுசிறு குவியல்கள்- small pockets
  7. 21 வறண்ட- arid
  8. 22 கொலராடோ பீடபூமி- Colorado Plateau