பக்கம்:அண்டார்க்டிக் பெருங்கடல்.pdf/27

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



17


1933-1934ஆம் ஆண்டுகளுக்கிடையே இவர் தம் குழுவினருடன் அண்டார்க்டிக் கண்டத்தில் மாரிக் காலத்தைக் கழித்தார். பனிக்குக் கீழ் ஆழத்தில் வலுவாக அமைக்கப்பட்ட வீடுகளில் இவர் மாரிக் காலத்தைக் கழித்தார். தென் முனையிலிருந்து 200 மைல் தொலைவுக்கு முக்கிய நிலக்கரிப் படிவுகள் இருப்பதாக இவர் கூறினர்.

வில்கின்ஸ், எல்ஸ் வொர்த் முதலியோர் அண்டார்க்டிக்கிற்குப் பயணங்களை மேற்கொண்டனர்.

1935-1937 ஆம் ஆண்டுகளுக்கிடையில் டிஸ்கவரி-2 என்னும் ஆங்கிலக் கப்பல் அண்டார்க்டிக் கண்டத்தைச் சுற்றி வந்தது. அது கடந்த தொலைவு 50,000 மைல். அண்டார்க்டிக் பகுதியில் திமிங்கிலங்கள் எ வ் வா று பரவியுள்ளன என்பதைக் கப்பலில் சென்று ஆராய்ந்தனர். தவிர, ராஸ் கடலைப்பற்றி, உயிர் நூல் தொடர் பாகவும், நீர் நூல் தொடர்பாகவும் செய்திகள் திரட்டினர்.

பலநாடுகள்

1939 ஆம் ஆண்டிலும், 1946-1947 ஆம் ஆண்டுகளுக்கிடையிலும் ப ய ர் டு என்பவர் தலைமையில் பல பயணங்களுக்கு அமெரிக்கா ஏற்பாடு செய்தது. பயணங்களின் நோக்கம் அண்டார்க்டிக்கின் கனி வளங்களை ஆராய்வதாக இருந்தது. உருசியா, நார்வே, பிாான்சு, ஜெர்மனி

1-А—600