பக்கம்:அண்டார்க்டிக் பெருங்கடல்.pdf/28

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



18

முதலிய பல நா டு களு ம் அண்டார்க்டிக்கில் பயணங்களை மேற்கொண்டு ஆராய்ச்சி நடத்தியுள்ளன. இன்றும் அமெரிக்காவும் உருசியாவும் அண்டார்க்டிக்கில் ஆராய்ச்சிகள் ந ட த் தி ய வண்ணமே உள்ளன.

ஏன் முடியாது?

அண்டார்க்டிக் வரலாற்றிலேயே, சிறப்பாக ஆராயப்பட்டது நில நூல் ஆண்டுத் திட்டத்தின் பொழுது ஆகும். இத்திட்டம் 1957-1958 ஆம் ஆண்டிற்கிடையே செயற்பட்டது. உலக அளவில் பல விஞ்ஞானிகளின் கூட்டு முயற்சியினால் நடைபெற்ற திட்டமாகும் இது. பன்னிரண்டு நாடுகள் அண்டார்க்டிக் ஆராய்ச்சியில் கலந்து கொண்டன. வானிலைக்கு வேண்டிய செய்திகள் முதன்மையாகத் திரட்டப்பட்டன. ஆராய்ச்சிக்காக 60 உற்று நோக்கு நிலையங்கள் அமைக்கப்பட்டன. எதிர்காலத்தில் அண்டார்க்டிக் கண்டம் வளமுள்ள பகுதியாக்கப்படலாம்; மனிதன் வாழலாம். சந்திர மண்டலத்திலேயே மனிதன் வாழ நினைக்கும் பொழுது, ஏன் அவன் அண்டார்க்டிக் கண்டத்தில் வாழமுடியாது?