பக்கம்:அண்டார்க்டிக் பெருங்கடல்.pdf/33

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
23

லாரி தம் குழுவினருடன் கிளம்பினர். இவ்விரு குழுவினரையும் மற்றொரு அமெரிக்கக் குழுவினர் விமானத்தில் பறந்து வந்து தென் முனையில் சந்தித்தனர். இவர்கள் அண்டார்க்டிக் கண்டத்தின் தரையைக் கடந்து தென் முனையை அடைந்தது நில இயல்நூல் ஆண்டின் பகுதி யாகவே அமைந்தது.

பயணம் தாழ்ந்த வெப்ப நிலைகள், உயர்ந்த மலைகளின் குறுக்கீடு மு த லி ய இன்னல்களுக் கிடையே நடைபெற்றது. 30 மைல்களுக்கு ஒரு தடவை நிலநடுக்க ஒலிப்பு அளவீடுகள் எடுக்கப் பட்டன. பனிக்கட்டியின் அடர்த்தியைக் கண்டு பிடிக்க இந்த அளவீடுகள் எடுக்கப்பட்டன.

இதுவரை கண்டறியப்படாத இரு மலைத் தொடர்கள் இருப்பதாகவும்; உலகின் பெரிய பனி யாறுகளில் ஒன்று இருப்பதாகவும் ஆராய்ச்சி களின் மூலம் தெரிய வந்தது.

பனிக்கட்டி அடர்த்தியைக் கணக்கிட்டதில் இருந்தும்; மற்றும் நில இயல்நூல் ஆண்டுத் தொடர்பாகச் செய்யப்பட்ட ஆராய்ச்சிகளிலிருந் தும், அண்டார்க்டிக் கண்டம் ஒரு தனி நிலத் தொகுதி அல்ல, தீவுகளும் மலைகளும் அடங்கிய தொகுதி என்பது தெரிய வருகிறது.