பக்கம்:அண்டார்க்டிக் பெருங்கடல்.pdf/39

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
29

பட்டுள்ளது. அது ஒரு போக்குவரவுத் தளமாகப் பயன்படுகிறது. கோடையில் இதில் 1,000 பேர் இருப்பார்கள் ; மாரிக்காலத்தில் 150 பேர்தான் இருப்பார்கள். கோடையில் (செப்டம்பர்-மார்ச்) பனிக்கட்டியைத் தகர்த்துக் கொண்டு இத்தளத் திற்கு வர இயலும். இங்கு மிதக்கும் பனிக்கட்டி யில் விமானத்தளமும் உள்ளது. பளுவான விமா னங்கள் இங்கு இறங்கலாம்.

மக்மர்டு வசதிகள் நிறைந்த நகரமே. கிறித்துவக்கோயில், அஞ்சல் அலுவலகம், தீயணைக்கும் நிலையம், திரைப்பட அரங்கு, மருத்துவமனை முதலிய வசதிகள் நிரம்பப் பெற்றது.

இங்கு அணு நிலையம் ஒன்று அமைக்கப்பட் டுள்ளது. தளத்தின் ஆற்றல் தேவைகளை நிறைவு செய்ய அணு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அண்டார்க்டிக்கில் அமைந்த மு த ல் நிலையம் இதுவே.

நூறுபேர் நிலையாக வாழ்வதற்குரிய இடங் கள் அமைக்கப்படும். பொதுவாகக் கோடையில் தான் இவ்வகை வேலைகள் தொடங்கப்பெறும். தற்பொழுதுள்ள நிலையங்கள் குடிசைகளே.

பயர்டு நிலையம்

மற்றோரு நிலையம் புதிய பயர்டு நிலையம். இது அண்டார்க்டிக்கின் மேட்டுச் சமவெளியில் உயரத் தில் அமைக்கப்படுகிறது. கட்டுமானத் திட்டத்