பக்கம்:அண்டார்க்டிக் பெருங்கடல்.pdf/48

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



9. உலகின் ஆராய்ச்சிக்கூடம்

உலகின் மிகப் பெரிய ஆராய்ச்சிக்கூடம் அண்டார்க்டிகா ஆகும். 1961-ஆம் ஆண்டிலிருந்து அனைத்துலக ஆராய்ச்சிக்கென்றே அது ஒதுக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, உருசியா, கனடா முதலிய பன்னிரண்டு நாடுகள் அதில் ஆராய்ச்சிகள் நடத்தியவண்ணம் உள்ளன. அது தனிச்சிறப்பு வாய்ந்த இயற்கையான உற்றுநோக்கு ஆராய்ச்சி நிலையமாகும். இதைக்கொண்டு உலகினையே ஆராயலாம்.

ஆராயப்படும் துறைகள்

வானிலை இயல், காற்று மேல் வெளி, காஸ்மிக் கதிர்கள், புவிக்காந்தம், நில நடுக்கவியல், தாவர இயல், விலங்கியல், உடலியல், மருத்துவ அறிவியல்கள் முதலிய துறைகள் இங்கு ஆராயப்படுகின்றன.

பனிக்கட்டி

அண்டார்க்டிக் கண்டம் உலகின் மிக உயர்ந்த ஆறாவது கண்டமாகும். இதன் பனிக்கட்டி உறை, உலகப் பணிக்கட்டி உறையில் 90 பங்கு உள்ளது; 70,00,000 கனமைல் உள்ளது. இது உருகுமானால் உலகக் கடல்களை 250 அடிக்கு உயர்த்தவல்லது! இதன் நிலத் தொகுதியில் 98% பனிக்கட்டியால் மூடப்பட்டுள்ளது. இக்காரணத்தால் இதற்கு வெண்பனிக் கண்டம் என்னும் பெயருமுண்டு. இக்கண்டம் கடல் மட்டத்திற்குமேல் சராசரி 1.6 கி. மீ. உள்ளது. இதன் மிக உயர்ந்த பகுதி