பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/104

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

லைகளைச் சிகிச்சை செய்யும் போது நச்சுத் தடைகளை உண்டாக்குவதற்கும் பேண வேண்டிய முறைகளைத் தெளிவாகக் கூறுகிறது. அறுவை சிகிச்சையின்போது திறக்கப்பட்ட பகுதிகளைத் திரும்ப மூடித் தைக்கப் பயன்படும் நூலிழைகளை மிருகங்களின் குடல்களிலிருந்தும்,பட்டு நூலிலிருந்தும், கம்பளி இழைகளிலிருந்தும் தயாரிக்கும் முறைகளையும், தையல் நூலிழைகளைக் கொண்டு தைக்கும் முறைகளையும் மிகச் சிறப்பாக எடுத்து விளக்குகிறது.

அது மட்டுமல்ல, மகப்பேறு மருத்துவம், குழந்தை நோய்கள் பற்றி தனிப்பிரிவு விளக்குகிறது. மகப்பேற்றின்போது மருத்துவச்சிகளும் தாதிகளும் நடந்து கொள்ளவேண்டிய முறைகளையும் செயற்பாடுகளையும் தெளிவாகக் கூறுகிறது.

இவர் இம் மருத்துவக் களஞ்சிய நூலில் அறுவை சிகிச்சைக்கென தான் பயன்படுத்திய சுமார் இருநூறு வகையான அறுவை சிகிச்சைக்கான கருவிகளையும் பற்றி விரிவாக விளக்கிக் கூறுவதோடு, அவற்றில் சில கருவிகளுடைய படங்களைக்கூட வரைபடமாக வரைந்து விளக்கியுள்ளார்.

இந்நூலின் மற்றொரு சிறப்பம்சம் மகப்பேற்றிற்குப் பின்னர் சிசு பராமரிப்பு எவ்வாறு அமைதல் வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்துவதாகும்

விரல் தட்டு நோயறி முறை

நோயின் தன்மையை அறிய நாடித் துடிப்பை அளவிடுதல், உடலைத் தொட்டு அறிதல் போன்ற பலமுறைகளைக் கையாண்டு நோயறிந்து மருத்துவம் செய்து வந்தனர். இப்னு சினா கண்டறிந்த நோய்றி முறைகளுள் ஒன்று. நோயாளியின் உடலைவிரலால் மெல்லத்தட்டுவதன்