பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/105

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

95

மூலம் அறிந்து கொள்ளும் முறையாகும். வியன்னாவின் புகழ்பெற்ற மருத்துவரும் ஆராய்ச்சியாளருமான லியோபோல்டு ஆவென் பிரக்கர்(1722-1809) விரலால் உடலைத் தட்டி நோய் அறியும் புதுமுறையைக் கண்டுபிடித்தார். இவர் கண்டறிந்த புதுமுறையும் இப்னு சினாவின் முறையும் ஒன்றாகவே அமைந்திருப்பது மற்றொரு வியப்பூட்டும் செய்திய பகும்

அன்று கண்டறிந்த நீரழிவு பகுப்பாய்வே இன்றும்

‘டையாபட்டிஸ்’ என்று கூறப்படும் நீரிழிவு நோய் இன்று உலகெங்கும் உள்ள ஒரு நோயாகும். இன்றுள்ளது போல் அதிக அளவில் அன்று இல்லாவிட்டாலும் குறைந்த அளவிலேனும் இந்நோய் இருந்தே வந்துள்ளது. இந்நோக்கான மருத்துவ முறைகளும் அன்றைக்கும் ஓரளவு இருந்தே வந்துள்ளது. நீரிழிவு நோயைப் பற்றி மாபெரும் மருத்துவ மேதையான இப்னு சினா மிக நுணுக்கமாகவும் விரிவாகவும் ஆய்ந்து பல உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளார். இவர் இந்நோய் பற்றித் தான் கண்டறிந்த கண்டுபிடிப்புகளைப் பற்றி தன் மருத்துவ நூல்களில் பதிவு செய்துள்ளார். நீரிழிவு நோய் பற்றி இப்னு சினா செய்த பகுப்பாய்வும் அண்மைக்காலத்தில் உலகின் மிகச்சிறந்த நீரிழிவு நோய் வல்லுநரான தாமஸ் வில்லிஸ் என்பவர் செய்த நீரிழிவு நோய் பகுப்பாய்வும் வேறுபாடின்றி இருப்பது மருத்துவ உலக அதிசயமாகக் கருதப்படுகிறது,

மருத்துவ உலகின் மற்றொரு மாமேதையாகத் திகழ்ந்த அல் ராஸீ, இப்னு சினாவின் ‘அல் கானூன்’போன்று வெறும் மருத்துவக் கோட்பாடுகளை மட்டும் கூறாது. நடைமுறைக்கேற்ற மருத்துவ முறைகளை விவரித்துக் கூறும் வகையில் பல்வேறு குறிப்புகளைக் கொண்ட நூலாக கிதாபுல் ஹாபி’ (பல்துறை மருத்துவக் களஞ்