பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/106

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

சியம்) எழுதியுள்ளார். இஃது ஐந்து தொகுதிகளைக் கொண்டதாகும். இத்தொகுதிகளில் அடங்கியுள்ள தலைப்புகளைப் பார்க்கும்போது அன்று மருத்துவத்துறை எத்தகைய வளமான வளர்ச்சியை எட்டியிருந்தது என்பதை நன்கு அறிந்துணர முடியும்.

முதல் தொகுதி மருத்துவவியலின் பொதுக் கோட்பாடு பற்றி விவரிக்கிறது

‘மருந்து, அதன் பயன்பாட்டு, எல்லை; மனப்போப்கு உறுப்புகளின் அமைவு, இயக்கம், வயது, பாலினம் ஆகியவற்றின் நோக்கம் ; குருதி கோழை, பித்தம் ஆகிய நீர்மப்பொருள்களின் இயல்பு: உறுப்புகளின் நோய்கள்; தசைநார்கள்; சதைப் பற்று ; நரம்புகள்; குருதிக் குழாய்கள் ;நாளங்கள்: உறுப்பியக்கங்கள்; நோய்கள்; அவற்றிற்குரியகாரணங்கள் (Aetiology), நோய்க் குறிகள் : நாடி ; சிறுநீர் பல்வேறு வயதினர்க்குரிய பத்திய உணவுத் திட்டங்கள் ; தடுப்பு மருந்துகள்; தட்பவெப்ப நிலைகளால் ஏற்படும் மாறுதல்கள்; அவற்றுக்கான சிகிச்சை முறைகள் ஆகியவை பற்றி இம் முதல் தொகுதி விளக்குகிறது.

இரண்டாவது தொகுதியில் இரு பகுதிகள் உள்ளன.முதல் பகுதி மருந்துகளின் தன்மைகளை ஆய்வு முறைகளாலும் சோதனைகளாலும் அறிவது எப்படி என விவரிக்கிறது, மருந்துப் பொருட்களைச் சோதனை செய்வது என்றால் அவை எப்படி இருக்க வேண்டும்; பிற மாறுதல்களால் அவை பாதிக்கப்படாமல் இருத்தல்; கடுமையற்ற சிறிய நோய்களுக்கு எதிர்மறை மருத்துவமுறையைப் பயன்படுத்தி பரிசோதித்தல், நோயின் தன்மைக்கும் கடுமைக்கும் தக்கவாறு இருக்கிறதா எனத் தீர்மானித்தல் போன்றவை பற்றி விளக்குகிறது. மருந்துப் பொருட்களின் செயல்படுமுறை; பல்வேறு மருந்துச் சரக்குகளைப் பாதுகாத்து வைக்கும் வழிகள் ஆகியவை பற்றிய பொது விதிகள் குறித்தும் விவாக விவரிக்கிறது .