பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/107

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

97


மூன்றாவது தொகுதி நோய் உண்டாவதற்கான காரணங்கள்; நோயின் அறிகுறிகள்; நோயாளியின் வெளிப்படையான அறிகுறிகளை வைத்து நோயை முடிவு செய்தல்; இன்ன நோய் வரக்கூடும் என்பதை முன்கூட்டியே அறிதல்; நோயின் கடுமையைத் தணிக்கும் மருத்துவ முறைகள் ஆகியவைகளைப் பற்றி மிகத் தெளிவாக விவரிக்கிறது. மேலும், தலை சம்பந்தப்பட்ட நோய்கள்;இயல்பு கடந்த மூளை இயக்கம்; தலைவலி; காக்கை வலிப்பு நோய்; முடக்கு வாதம்; கண், காது மூக்கு,தொண்டை ஆகியவற்றில் உண்டாகும் நோய்கள் ; சிறு நீர் தொடர்பான (Genitour.nary) உணவுக் குழாயில் ஏற்படக்கூடிய நோய்கள்; தசை நார்கள், மூட்டுகள், கால்கள் ஆகியவற்றில் உண்டாகும் நோய்கள் போன்றவை பற்றியும் விரிவாக விவரிக்கிறது.

பொதுவான நோய்கள் பற்றி நான்காம் தொகுதி விளக்குகிறது. காய்ச்சல் வகைகள்; அவற்றிற்கான சிகிச்சை முறைகள்; உடலில் ஏற்படும் பலவகை வீக்கங்கள் ;கட்டிகள், கொப்புளங்கள் ; தொழுநோய்; சிறு அறுவை சிகிச்சைகள் ; வெட்டுக்காயங்கள்; அவற்றுக்கான சிகிச்சை முறைகள்; சீழ்பிடிக்கும் புண்கள்; சுரப்பிகள் போன்றவை பற்றியும் பல்வேறு வகையான நச்சுப் பொருள்கள் பற்றியும் அழகுக் கலை பற்றியும் விவரிக்கிறது.

ஐந்தாவது தொகுதி மருத்துவத் துறையின் முக்கியப்பகுதியான மருந்தியல் பற்றிக் கூறுகிறது. இஃது மருந்துப்பட்டியல் குறிப்புகளை ஏராளமாகச் கொண்டுள்ளது. இதற்கு முன் இத்தகைய மருந்துப் பட்டியலைத் தக்க குறிப்புகளோடு அல் கிந்தீ (கி பி. 800-873) என்பவர் தந்துள்ளார். அவருக்குப் பின்னர் இப்னு சினா இத்தகைய மருந்துப் பட்டியல் ஒன்றைத் தொகுத்தளித்துள்ளார். இவ்வைந்தாம் தொகுதி சிறப்பு மருந்துகளின் தன்மைகள் தயா

7