பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/108

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

ரிக்கும் முறைகள்:கருநிலைப்படும்மருந்துகள்;மலக்குடல், சிறுநீர்த்ளை போன்றவற்றில் கரைய விடப்படும் குளிகைகள், பாகுகள்; மருந்துப் பொடிகள்; கஷாயங்கள்;மருந்துக் கலவைகள், அருமருந்துகள்; பல்வேறு நோய்களுக்கு மருந்து தரும் முறைகள்; எடைகள்; அளவைகள் பற்றிய விவரங்களைக் கொண்டதாகும்.

முதன் முதலில் இரத்தவோட்ட நுணுக்கம் அறிந்தவர்

இரத்தவோட்டம் பற்றிய பல்வேறு நுட்பச் செய்திகளை வில்லியம் ஹார்வி கண்டறிவதற்கு முன்பே இரத்தவோட்டம் பற்றிய நுணுக்கங்களை கண்டு பிடித்து உலகுக்கு உணர்த்தியவர் இப்னு அல் நாபிஸ் என்பவராவார். இவர் செர்வடெஸ் என்னும் ஸ்பானிய மருத்துவ விஞ்ஞானிக்கும் பல நூற்றாண்டுகட்கும் முன்பே சுவாசப்பை இரத்தவோட்ட த்தை (Palmonary circulation of blood) கண்டறிந்து கூறினார்.

இவர்களைப் போன்றே மருத்துவத் துறை வளர்ச்சிக்குப் பெரும் பணியாற்றிய முஸ்லிம்கள் அலி இப்னு அல் அப்பாஸ், இப்னு சுலைமான், இப்னு ஹிபுத்தா, இப்னு அலி ஸஹ்ரவி, இப்னு அலி அல் ஆலா யுஹன்னபி மூசா அபுல் கைர் அபூ கோலத் போன்ற மருத்துவத் துறை பேரறிஞர்கள் ஆவர்.

உலகின் முதல் பொது மருத்துவமனை

மருத்துவம் வளர்ச்சி பெற மருத்துவமனைகளே நிலைக்களனாக அமைய முடியும் என அன்றைய அரபு நாட்டுக்கலீஃபாக்கள் கருதினார்கள். மருத்துவமனைகள் மூலம் மருத்துவக் கல்வியைப் பெருக்கவும் மருத்துவ ஆராய்ச்சி