பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/109

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

99

களை வளர்க்கவும் மக்களை உடல் நலத்துடன் வாழத்தூண்டவும் முடியும் என நம்பி தங்கள் மேற்பார்வையில் பொது மருத்துவ மனைகளை உருவாக்கினார்கள். இவ்வாறு பத்தாம் நூற்றாண்டில் பாக்தாது நகரில் உருவாக்கப்பட்ட 'அதூதி' பொது மருத்துவ மனையே உலகின் பெரிய அளவில் உருவான பொது மருத்துவமனையாகும். இருபத்து நான்கு மருத்துவர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்த இப்பொது மருத்துவ மனை பெரும் நூலகம் ஒன்றையும் மருத்துவம் பற்றி விரிவுரைகள் நிகழ்த்த சொற்பொழிவுக் கூடங்களையும் கொண்டு விளங்கியது.

தொடர்ந்து பொது மருத்துவமனைகளின் தோற்றம்

மருத்துவத் துறை வளர்ச்சியில் எந்த அளவுக்கு ஆர்வம் காட்டினார்களோ அதே அளவுக்கு நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் பொது மருத்துவமனைகளை நிறுவுவதிலும் பேரார்வம் காட்டினர்.

கலீஃபா அல் முத்தவக்கில் ஆட்சிபுரிந்த போது மக்களின் உடற்பிணி அகற்றும் மருத்துவமனைகளை நிறுவுவதில் பெரு முயற்சி மேற்கொண்டார். இரண்டாவது பொது மருத்துவமனையை கெய்ரோவில் உருவாக்கினார்.பின்னர், ஐயூபி கலீஃபாக்கள் ஆட்சி நடந்தபோது எகிப்து நாட்டின் பல பகுதிகளிலும் பொது மருத்துவமனைகள் நிறுவி மக்களின் உடல் பிணி போக்க வகை செய்தனர்.

இதுவரை பொது மருத்துவமனைகளில் இலவச மருத்துவமும் மருந்தும் பெற இயன்றது. ஆனால் 872இல் கெய்ரோவின் ஆளுநராக இருந்த இப்னு தூலூன் என்பவர் பெரும் பணச் செலவில் கெய்ரோவில் ஒரு மருத்துவமனையைக் கட்டுவித்தார். இம்மருத்துவமனையில் மருத்துவமும் மருந்தும் மட்டும் இலவசம் அல்ல. நோயாளிக்குத் தேவையான உணவும் அவர்கள் தங்கி மருத்துவம் பெறவேண்டிய