பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/113

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

103

முடிகிறது. இதனால், மருத்துவமனைகளோடு இணைந்த மருத்துவக் கல்விக்கூடங்கள் எல்லா வகையான வசதிகளையும் கொண்டு சிறந்து விளங்கின.

இன்றும் அதே முறைதான் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது அன்று மருத்துவக்கல்வி புகட்டப்பட்ட முறையிலேயே இன்றும் நவீன மருத்துவக் கல்வி புகட்டப்பட்டு வருகிறது என்பது எண்ணிப் பார்க்கத்தக்கதாகும்.

அது மட்டுமல்ல. அன்று உயர்தரமான மருத்துவக்கல்விக் கற்பிக்கப்படுவதற்கு வாய்ப்பாக சிறந்த நூலகங்களைக் கொண்டதாக ஒவ்வொரு மருத்துவமனைக் கல்விக்கூடங்களும் விளங்கின, அந்நூலகங்களில் நூற்றுக்கணக்கான மருத்துவ நூல்களும் ஆய்வேடுகளும் மாணவர் உயர்தரக் கல்வி பெற உதவின.

மருத்துவச் செலவை ஏற்ற வக்ஃபு அற நிறுவனங்கள்

மருத்துவக் கல்விக்கூடங்கள் ஒவ்வொன்றும் மருத்துவ அறிஞர்கள். ஆய்வாளர்கள் விரிவுரையும் விளக்கவுரையும் ஆற்றுவதற்கு வழியாக சொற்பொழிவுக்கூடங்களையும் கொண்டிருந்தன. அத்துடன் மருத்துவக் கல்விக்கூடங்களுக்கு அருகிலேயே ஆசிரியர்கட்கும் மாணவர்கட்கும் பிறஅலுவலர்கட்கும் தனித்தனி குடியிருப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றிற்கான செலவுகளையும் பிற மருத்துவத்துறைக்கான உதவிகளையும் அக்கால இஸ்லாமிய அற நிறுவனமான வக்ஃப்' அமைப்புகள் அளித்து வந்தன.

மருந்தியல் துறையின் முனைப்பான வளர்ச்சி

மருத்துவத்துறையின் இன்றியமையா மற்றொரு