பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/116

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106


முஸ்லிம் கட்டிடக் கலைச்செல்வாக்கால் உருவான புதுப் பாணி

முஸ்லிம் கட்டிடக் கலை திறனும் கட்டுமானப்பொறியியல் திறனும் இஸ்லாமிய நாடுகளிலும் அன்றைய இஸ்லாமிய ஸ்பெயினிலும் மட்டும் அடங்கிவிடவில்லை. அதன் செல்வாக்கு முஸ்லிம்கள் எங்கெல்லாம் சென்றார்களோ அங்கெல்லாம் பரவியது. அந்தந்தப் பகுதிக்குரிய மரபான கட்டிடக் கலையோடு கலந்து ஒரு புதுப் பாணிக் கட்டுமான முறையை உருவாக்கியது. இதன் தொடர்ச்சியை இன்றும் ஊக்குவிக்கும் முறையில் சில திட்டங்களும் செயல்பாடுகளும் உலகளாவிய முறையில் அமைந்து வருகின்றன, அவற்றுள் ஒன்றே ஆகாகான் இஸ்லாமியக் கட்டிடக்கலை விருது உள் நாட்டுப் பண்பாட்டிற்கும் தட்பவெப்பநிலைக்கும் இசைவாகவும் தேவைக்கு ஏற்புடையதாகவும் இஸ்லாமியத் தத்துவங்களுக்கு இணக்கமாகவும் உருவாக்கப்படும் கட்டிட கட்டுமானத் திறனுக்கு விருதும் பரிசும் வழங்க 1976இல் அறிவிக்கப்பட்டதே இப்பரிசுத் திட்டம் இந்நோக்கத்தை உரிய முறையில் நிறைவேற்றவும் முஸ்லிம்களின் கட்டிட பொறியியல் நுண் திறமையைப் போற்றிக்காத்து வளர்க்கவும் பன்னாட்டு அளவில் இஸ்லாமியக் கட்டிடக் கலைப் பொறியியல் திறன் தொடர்பான கருத்தரங்குகளும் உரைக் கோலைகளும் உலகெங்கும் நடைபெற்று வருகின்றன.

அன்றைய கட்டுமான பொறியியல் திறனும் இன்றைய கட்டுமானப் பொருட்களும்

இன்று பழைய பொறியியல் நுணுக்க அடிப்படையில் புதிய தேவைகளை நிறைவு செய்யும் வகையில் கட்டிடங்கள் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்படுகின்றன.இதற்குச் சான்றாக துருக்கிய கட்டிட வல்லுநர் வேதாத தலோக்கே என்பவர் இஸ்லாமாபாதில் உருவாக்கி வரும் தேசிய பெரு மசூதியைக் கூறலாம். இன்றைய நவீனப்