பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/119

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

109

ஆளுகைக்குட்பட்டிருந்த இஸ்லாமிய ஸ்பெயினிலிருந்து ஐரோப்பாவுக்கு தங்கள் அறிவியல் அறிவை ஏற்றுமதி செய்ய மொழிபெயர்ப்பு கல்லூரியையே உருவாக்கினார்கள் எனும் செய்தி எண்ணத்தக்கதாகும்.

அறிவியலை ஆட்கொண்ட ஐரோப்பா

இதன் பின்னரே, ஐரோப்பா தன் இருள் அகற்றி விழிப்புக்கொண்டது. முஸ்லிம் விஞ்ஞானிகள் வகுத்தமைத்த அறிவியல் அடிப்படையில் தங்கள் சிந்தனைகளைச் செலுத்தினார்கள். வணிக நிமித்தம் சென்ற இடங்களிலே அமைத்த காலனி ஆட்சிகள் ஐரோப்பிய நாடுகளை வளங்கொழிக்கச் செய்தன. வணிகத் தேவைகள் வானளாவ உயர்ந்தன. எனவே, தொழிற்புரட்சி தோன்ற வேண்டிய காலக்கட்டாயம் ஏற்பட்டது. இத்தகைய சூழ்நிலையே விஞ்ஞான வளர்ச்சிக்கு வேக முடுக்கியாக அமைந்தது.தங்கள் தாலாட்டி, சீராட்டி வளர்த்த அறிவியல் துறையை ஐரோப்பியர்களிடம் ஒப்படைத்து விட்டு அமைதி கொள்ளும் சூழ்நிலைக்கு முஸ்லிம் ஆட்சிகளும் முஸ்லிம் அறிவியலாளர்களும் ஆடப்பட்டனர்.

சுமார் அறுநூறு ஆண்டுகள் அறிவியல் சாதனைகள் மூலம் பொற்காலத்தை உருவாக்கி நிலைபெறச் செய்த முஸ்லிம்களின் இத்தகு விஞ்ஞான வெற்றிக்கு அடித்தளமான முக்கிய காரணங்களை அறிவுலகம் நன்கு ஆய்ந்து கூறியுள்ளது.

அண்ணலார் பணிப்பும் அல்குர்ஆன் கட்டளையும்

முதல் காரணம், தொடக்கத்தில் கூறியது போன்று பொருமானார் (சல்) அவர்களும், அவர்கள் வாயிலாக உலகுக்குக் கிட்டிய திருமறையும் அறிவுத் தேடலின் அவசியத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதாகும்.