பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/121

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

111

யாக் கடமையாகவும் கருதினர். ‘நீரளவே ஆகுமாம் நீராம்பல்’ என்பது போல அறிவியல் துறைகளில் கிட்டுகின்ற வெற்றி இஸ்லாத்துக்குக் கிடைக்கும் வெற்றியாக அப்பணியைக் கருதி மகிழ்ந்தனர். நாட்டின் வளர்ச்சியாகவும் மக்கள் சமுதாய முன்னேற்ற வேக முடுக்கியாகவும் அறியவியல் முயற்சியைக் கருதினர்.

இதைப் பற்றிய புகழ் பெற்ற வரலாற்றாசிரியர் ஹெச் ஏ.ஆர்.கிப் அவர்கள் கூறுகிறார்.

“வேறெங்கும் இல்லாத அளவுக்கு, இஸ்லாத்தினால் அறிவியல்கள் விஞ்ஞானங்களின் மலர்ச்சி - உயர் பதவிகளில் இருந்தோரின் ஆதரவையும் வள்ளல் தன்மையையும் சார்ந்தே இருந்தது. முஸ்லிம் சமுதாயம் வலிமை குன்றியபோது விஞ்ஞான வளர்ச்சி அதன் ஆற்றலையும் வீரியத்தையும் இழந்தது. ஆனால் ஏதாவது ஒரு தலை நகரில் இளவரசர்களும், அமைச்சர்களும் இன்புறு நிலைக்காகவோ, லாபத்துக்காகவோ, அல்லது புகழுக்காகவோ கூட அறிவியல் துறைகளுக்கு ஆதரவு அளித்தபோது அவற்றின் சுடர் ஒளிவீசிக் கொண்டுதான் இருந்தது.”

அனைத்துலகப் பொதுநோக்கும் அறிவியல் வளர்ச்சியும்

அறிவியல் வளர்ச்சியில் முஸ்லிம்கள் முனைப்பான பங்கு கொண்டு விரைவான வளர்ச்சிக்கு வழியமைத்ததில் இஸ்லாமிய நெறிக்கும் அதன் தன்மைக்கும் பெரும் பங்கு உண்டு உலகளாவிய நோக்கில் அமைந்த . ஒப்பற்ற நெறி இஸ்லாமிய நெறி வயலுக்குவயல் வரப்புத் தேவை ஏரிக்கு ஏரி கரை தேவை. ஆனால், வரப்புகளும் கரைகளும் தடுப்புச் சுவர்களாக அமைவதை இஸ்லாம் ஏற்கவில்லை,அதை அறவே வெறுக்கிறது. இதே அடிப்படையில் தான் அன்றைய இஸ்லாமிய அரசுகளும் அமைந்து இயங்கின.அறிவியல் வளர்ச்சியைப் பொருத்தவரை பன்னாட்டு உணர்வோடவே அன்றைய ஆட்சிகளும் செயல்பட்டன.