பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/123

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

113

வின் விஞ்ஞான சாதனைக் கால கட்டமாகத் கணித்துள்ளார். இக்காலப் பகுதியில் அறிவியல் சாதனைகளை நிகழ்த்தியவர்களில் தலையாயவர்களாக ஹிஸியன் ஸாங்கி ஐ சிங்க் ஆகிய இருவரின் கால கட்டமாகக் கணித்துள்ளார். இதன் பின்னர் கி.பி. 750 முதல் 1100 வரையிலானகாலப் பகுதியை இஸ்லாமிய விஞ்ஞான வளர்ச்சிக் கால பகுதியாகிய 350 ஆண்டுகள் முழுக்க முழுக்க முஸ்லிம்களின் விஞ்ஞான வளர்ச்சிக்கான காலமாகவே அமைந்துள்ளதை விவரிக்கிறார். இக்காலகட்டத்தில் முஸ்லிம் விஞ்ஞான விற்பன்னர்களாக - அறிவியல் துறைகளின் ஆற்றமிகு தலைவர்களாக ஜாபிர் கவாரிஸ்மி, அர்- ராணி,மஸ்ஊதி. வசபா, அல்பிரூனி, இப்னு சினா, உமர் கையாம் போன்றவர்களைக் குறிப்பிடுகிறார்.

இக்கால கட்டத்தில் அறிவியல் வளர்ச்சிக்கும் அரும்பாடு பட்டவர்களில் அரபுகள், துருக்கியர்.ஆஃகானியர், பாரசீகர் என முஸ்லிம் இனத்தவர்கள் அடங்கியுள்ளனர். இவர்கள் அறிவியல் துறையின் பெரும் பிரிவுகளான குறிக் கணக்கியல் (Algepraists), வேதியியல்,இயற்பியல், மருத்துவவியல் பூகோளவியல், கணிதவியல் ,வானலியல் போன்றவற்றில் மாபெரும் சாதனை நிகழ்த்தியவர்களாகப் போற்றப்படுகின்றனர்.

ஜார்ஜ் சார்ட்டனின் இவ்விஞ்ஞான வரலாற்று நூலில் முதன்முறையாக மேனாட்டார் பெயர் கி. பி.1100-க்கு பிறகே குறிக்கப்படுகிறது. கிரிமோனாவைச் சேர்ந்த ஜெரார்ட் ரோஜர், பேக்கர் ஆகியோரின் பெயர்கள் குறிக்கப்பட்டாலும் கூட. அவர்கள் அறிவியலில் பெருஞ்சாதனை எதையும் நிகழ்த்தியவர்களாகக் குறிக்கப்படவில்லை .

அதன் பின்னர் உலகில் அறிவியல் சாதனையாளர்களாகத் தொடர்ந்து முஸ்லிம் விஞ்ஞானிகளும் அவர்களது