பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/25

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

15

வந்ததை அறிந்தபோது அளவிலா உவகை கொண்டேன், ஆய்வுக்கூடமும் அதற்கு உறுதுணையான நூலகப் பகுதியும் அன்றைய கல்வின் நோக்கத்தையும் அதை முழுமையாகப் பெறும் சூழலையும் உருவாக்கியிருந்த பாங்கையும் அறிந்தபோதுதான் ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு மேலாகத் திறம்பட்ட மார்க்க அறிவையும் அறிவியல் ஆய்வுகளையும் முன்னைப்புடன் கற்பித்து. உலகின் மிகப்பழமையான, அதே சமயம் உயிர்ப்புத்திறன் குன்றாத ஒரே பல்கலைக்கழகமாக விளங்கி வரும் அல் அஸ்ஹர் பல்கலைக் கழகத்தின் பெருமை எனக்குத் தெளிவாகியது.

அறிவியல் கண்ணோட்டம் ஜூம்மா உரை

நான் கெய்ரோவில் தங்கியிருந்த சமயம் ரமலான் மாதமாக இருந்தால் ஒரு வெள்ளிக்கிமை ஆயிரமாண்டுக்கால அல் அஸ்ஹர் மசூதியில் ஜும்மா தொழுகை தொழவிரும்பிச் சென்றேன், என்னை அழைத்துச் சென்ற அரபு நண்பர் மூலம் தொழுகை நடத்தியவர் ஆற்றிய ஜூம்மா பேருரையின் உள்ளடக்கத்தைத் தெரிந்து கொள்ள முடிந்தது திருமறைச் செய்திகளை பெருமானாரின் வாக்கின் அடிப்படையில் அறிவியல் கண்ணோட்டத்தோடு விளக்குவதாயிருந்தது அப்பேச்சு.

அறிவியல் தெளிவும் உணர்வும் ஒளிவிட, உலகப்போக்கை திருமறை தரும் இறைச் செய்திகளோடு இணைத்துப் பேசி அண்ணலாரின் வாழ்க்கைவழியே வந்திருந்தோருக்கு இதமாக எடுத்துக்கூறிய அந்த மார்க்க மேதையின் அறிவாற்றலும் வாக்குச் சாதுரியமும் வியப்பூட்டுவதாயிருந்தது. அதன் பின் அப்பள்ளிவாசலோடு இணைந்திருந்த அல் அஸ்ஹர் பல்கலைக் கழகத்தைச் சுற்றிப்பார்க்க விரும்பி நண்பரோடு சென்றேன்.