பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/46

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

கோட்பாட்டளவிலான கிரேக்க அறிவியல் சிந்தனை

இந்திய எண் குறியீடுகள் எவ்வாறு அரபு நாட்டை அடைந்து இறுதி வடிவம் பெற்றதோ அதேபோன்றுதான் கிரேக்க நாடு வழங்கிய அடிப்படை எண் கணிதமும் புதியவடிவம் பெற்றது. இதேபோக்கில் அறிவியல் அடிப்படைக் கூறுகளும் செயல் வடிவம் பெற்று முழு அளவில் அறிவியல் சாதனைகளாகப் பரிணமித்தன. வரலாற்று அடிப்படையில் ஆராயும் போது இவ்வுண்மை நன்கு புலனாகும்.

அன்றைய கிரேக்க அறிஞர்களின் ஆராய்ச்சி நூல்களில் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான பல்வேறு கூறுகள் அடங்கியிருந்த போதிலும் அவை வெறும் கொள்கை கோட்பாட்டளவிலேயே இருந்தன என்றுதான் கூறவேண்டும். அவற்றை மெய்ப்பித்துக் காட்டும் செய்முறை வழிகாட்டல்களோ ஆய்வுக்குரிய சாதனங்களின் உதவியோ இல்லாமலேயே இருந்தன. எனவே. அவை வெறும் அனுமானம் என்ற அளவில் மட்டுமே கருதக் கூடியவைகளாக இருந்ததில் வியப்பேதும் இல்லை.

ஆனால், அவ்விஞ்ஞானக் கோட்பாடுகளைக் கிரேக்க மொழியிலிருந்து அரபி மொழிக்குப் பெயர்த்த பின்னர் அரபு நாட்டு அறிவியல் அறிஞர்கள் அவற்றைச் சோதனை முறை மூலம் மேன்மேலும் உண்மை கண்டறிய முயன்றனர்.இதற்கான கருவிகளையும் கண்டுபிடித்துப் பயன்படுத்தலாயினர். இப்பெரும் செயலால் கிரேக்க அறிவியல் அறிஞர்களின் அனுமான ஆய்வறிவு எந்த அளவுக்கு உண்மையின்அடிப்படையில் அமைந்துள்ளன என்பது பல்லாற்றானும் உறுதிப்படுத்தப்பட்டது. அவற்றின் அடிப்படையிலேயே இன்றைய அறிவியல் துளிர்த்து வளரத் தொடங்கியது.இவ்வகையில் கிரேக்கச் சிந்தனைக்கு செயல் வடிவம் தந்து அவற்றை நிலை நிறுத்திய பெருமை அரபு முஸ்லிம்களுக்கும் இஸ்லாமிய நாடுகளைச் சார்ந்த முஸ்லிம்களுக்குமே