பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/51

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

41

களாக இருந்தனர். இன்னும் சொல்லப்போனால் அறிவியல்லின் தந்தை எனப் போற்றப்படும் அரிஸ்டாட்டிலின் இயற்பியல் விஞ்ஞானத்தில் முஸ்லிம் அறிவியலாளர்கள் அனைவருமே சிறப்பறிவு பெற்றவர்களாகத் திகழ்ந்தார்கள்.

இயற்பியல் துறையின் பல்வேறு வளர்ச்சி நிலைகளுக்கு வழியமைத்த முஸ்லில்களே வானவியல் ஆய்வுக்கு அடித்தளம் அமைத்தவர்களாக வரலாற்றில் மின்னுகிறார்கள்.

“அரபு நாட்டு வானவியல் அறிஞர்களின் தோள்களில் நின்று தான் என்னால் வானத்தையே ஆய முடிகிறது” என நியூட்டன் கூறியது போலவே இன்றைய இயற்பியல் துறையின் மாபெரும் வளர்ச்சிக்கு காரணமாயமைந்தவரும் இன்றைய விண்வெளி வெற்றிகளுக்கு மையமான சார்புக் கொள்கையை (Theory of Relativity) உருவாக்கியவருமான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறியுள்ளார்.

இதிலிருந்து அன்றைய அரபு நாட்டு முஸ்லிம் இயற்பியல் விஞ்ஞானிகள் நாடெங்கும் பரவியிருந்ததோடு அரிய வானவியல் உண்மைகளையெல்லாம் கண்டறிந்து கூறினார்கள் என்பதும் தெளிவாகிறது.

முதல் வானவியல் ஆய்வுக்கூடம்

முழுமையான முதல் வானவியல் ஆய்வுக்கூடத்தை இப்ராஹீம் அல்பஸாரி என்பவர் கி.பி. 772இல் தொடங்கினார் என்பதை வானவியல் ஆய்வு வரலாறு கூறுகிறது.

வானவியல் ஆராய்ச்சி ஒரு குறிப்பிட்ட வளர்ச்சிக் கட்டத்தை எட்டியபோது முதன்மைத்தரமான வானவியல் ஆய்வுக்கூடம் அமைக்கப்பட வேண்டிய அவசிய.