பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/54

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

புதிய புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் வெளி வரத்துணை நிற்பதில் பெருமை கொண்டனர். இவ்வகையில் செல்ஜுக் மன்னர் சுல்தான் ஜலாலுத்தீன் மாலிக் ஷாஹ் அவர்கள் வானவியல் ஆராய்ச்சிக்கென சிறந்த ஆய்வுக்கூடமொன்றை உருவாக்கி, அதில் ஆய்வு நடத்த அறிஞர்களையும் ஆய்வாளர்களையும் திரட்டி, ஆராய்ச்சிக்கான அனைத்து வசதிகளையும் செய்து தந்தார் இத்தகையவுக் கூடத்தை அல்ராப் எனுமிடத்தில் 1075 இல் நிறுவினார். இதையொத்த மற்றொரு வானவியல் ஆய்வுக்கூடத்தை அல் நெஷாப்பூர் எனுமிடத்தில் உருவாக்கினார்.

இவ்வாராய்ச்சிக் கூடத்தில் ஆய்வு நிகழ்த்திய அறிஞர்களுள் ஒருவரான உமர்கையாம் எனும் ஆய்வாளர் தான் செம்மையான ‘நாட்காட்டி’ (Calender) - ஐ உருவாக்கினார். இவருக்கு முன்னதாகவே பாரசீக அறிஞர்களால்‘ஒருவகை நாட்காட்டி உருவாக்கப்பட்டிருந்தது. எனினும் இப்பாரசீக நாட்காட்டியில் ஐயாபாரம் ஆண்டுகட்கு ஒருநாள் குறைவாகியது. அதே சமயத்தில் நடைமுறையில் இருந்த கிரிகேரின் நாட்காட்டியில் 3330 ஆண்டுகளில் ஒரு நாள் நாட்காட்டி நாள் குறைவோ அதிகமோ இல்லாமல் செம்மையானதாக அமைந்தது.

ஈர்ப்புவிசையையும் ஏவுகணையையும் முதலில் கண்டறிந்தவர்கள் முஸ்லிம்களே!

சாதாரணமாக இயக்கவியல் குறித்து அக்காலத்தில் எழுந்த பல பிரச்சினைகளுக்குச் சரியான தீர்வு கண்டவர் அன்றைய முஸ்லிம் விஞ்ஞானிகளேயாவர். இன்று நடைமுறையில் உள்ள ஏவுகணை இயக்கத்திற்கான இயங்கு விசைக்கோட்பாட்டை அன்றே உருவாக்கிய பெருமைகள்குரியவர் இப்னு அல்-ஹைத்தாம் எனும் இயற்பியல் அறிஞர்