பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/56

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46


இயற்பியலையும் மருத்துவத்தையும் இணைத்து ஆராய்ச்சி

இப்னு அல் ஹைத்தாமின் கண்டுபிடிப்புகளால் கண்பார்வை இயல் தனிச்சிறப்புடைய துறையாகத் திகழ்ந்தது.இத்துறையின் வளமான வளர்ச்சிக்கு மற்றுமொரு காரணம் இவர் தமது ஆராய்ச்சிகளின் போது இயற்பியலையும் மருத்துவ இயலையும் இணைத்து ஆயத் தொடங்கியதாகும். இதன் விளைவாக ஒளியையும் ஒளியின் பிரதிபலிப்பான கண்ணையும் கூர்ந்து ஆராய நேர்ந்தது.

இவர் கண்களைப் பற்றி எழுதிய ‘கண் ணொளியியல்’(கிதாம் அல் - மனாசிர்) என்ற நூல் கண்களைப் பற்றி இடைக்காலத்தில் எழுதப்பட்ட மிகச்சிறந்த நூலாக இன்றும் மதிக்கப்படுகிறது.

இன்று கண்களை மூளையின் புற நீட்சியாக மருத்துவ உலகம் கருதுகிறது, இதே கருத்தை அடிப்படையாகக் கொண்டு பன்னெடுங்காலத்திற்கு முன்பு கண்ணொளியியல் ஆய்வுகள் செய்யப்பட்டன என்பது இன்று வியப்பூட்டும் செய்தியாகும்.

அறுவை மருத்துவத்திற்கு மயக்க மருந்து

அறுவை சிகிச்சையின்போது மயக்க மருந்தைப் பயன்படுத்தலாம் என முதன் முதலில் கண்டறிந்து கூறியவர் இப்னு அல் ஹைத்தாமே ஆவார்.இவர் இயற்பியலின் மாபெரும் வல்லுநராக திகழ்ந்து பல புதிய கண்டுபிடிப்புகளை ஆய்ந்தறிந்து உலகுக்கு உணர்த்தி வரலாறு படைத்தவரும் கூட, காற்று மண்டலம் பற்றிப் புதிய பல செய்திகளை ஆராய்ந்து அறிந்து கூறியவர். நீள் வட்ட மற்றும் கோளவடிவ ஆடிகள் பற்றியும்