பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/61

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

51

1294 வரை வாழ்ந்ததாகக் குறிக்கப்படும் இவர் எழுதிய “மூஜம் அல் பல்தான்” எனும் நூல் அக்கால முஸ்லிம்கள் பெற்றிருந்த பூகோள அறிவின் திரட்சியை உலகுக்கு விண்டுரைக்கும் பூகோள தகவல் களஞ்சியமாகும். இக்காலத்தில் உள்ளதுபோல் அகர வரிசையில் அக்காலத்தில் புகழ்பெற்று விளங்கிய நகரங்களைப் பற்றிய தொகுப்புஒன்றைத் தயாரித்து நூல் வடிவில் வெளியிட்டார்.

வண்ண - பூகோள வரைபடங்கள்

பிற்காலத்தில் மேலை நாட்டுப் பூகோளவியல் அறிஞர்களால் பெரிதும் போற்றப்பட்டவர் அபூ அப்துல்லாஹ் முஹம்மது இப்னு அஹ்மது அல் முகத்தஸி எனும் முஸ்லிம் விற்பன்னராவார். மற்றவர்களைவிட இவரது பூகோளப் படைப்புகள் பெரும் புகழ் பெற்றதற்கு அடிப்படைக்காரணம், இவர் வரைந்த பூகோள வரைபடங்களில் பாலைப் பகுதிகளையும் பசுமை வளம் கொஞ்சும் இடங்களையும் கட ல்களையும் ஆறுகளையும் மலைகளையும் பல்வேறு வண்ணங்களைக் கொண்டு வரைந்து காட்டியமையாகும். அக்காலத்தில் புகழ்பெற்று விளங்கிய வணிக மார்க்கங்களையும் வண்ண நிறத்திலேயே சுட்டிக்காட்டிப் பார்ப்போருக்கும் படிப்போருக்கும் பூகோள செய்திகளை தெள்ளத் தெளிவாக விளக்க முயன்றதேயாகும்

இவரைப் பின்பற்றி கண்கவர் வண்ணங்களைக் கொண்டு மிகச் செம்மையான பூகோள் வரைபடங்களை வரைந்தவர். அபூ ஸைது அஹமத் இப்னு சாலிஹ் அல் பல்கி எனும் முஸ்லிம் பூகோளவியல் வல்லுநராவார்.இவரது பூகோளப் படத்தில் அக்கால வாணிகத்தில் தலைசிறந்த விளங்கிய நாடுகளாவன: இந்தியா, அரேபியா, மொராக்கோ , சிரியா, எகிப்து, அல்ஜீரியா போன்ற