பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/71

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

61


உலோகங்களைப் பிரித்தெடுக்கும் நவீன முறை

அக்காலத் தில் உலோகங்களைப் பற்றி ஓரளவு அறிந்திருந்தபோதிலும் அவற்றைச் சுத்தம் செய்து பெறுகின்ற நவீனமுறை ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை வேதியியல் முறையில் உலோகங்களைச் சுத்தம் செய்யவும் அவற்றைத் தனித் தனியே பிரித்தெடுக்கவுமான நவீன முறையை ஆராய்ந்து கண்டுபிடித்தவரும் இவரே யாவார்.

துணி நெய்யவும் தோல்களைப் பதனிடவும் அக்காலத்தில் தெரிந்திருந்தார்கள். ஆனால், சாயத்தை உருவாக்கி,அதைத் துணிகளிலும் பதனிட்ட தோள்களிலும் பயன்படுத்தி சாயமேற்றும் முறை அறியாததொன்றாகவே இருந்து வந்தது. வேதியியல் முறையில் வண்ணச் சாயங்களை உருவாக்கியதோடு அவற்றைக் கொண்டு துணிக்கும் தோலுக்கும் சாயமேற்றி கண்கவரும் வகையில் உருவாக்கிப் பெறும் முறையை முதன்முதலில் கண்டறிந்த பெருமையும் இவரையே சாரும்.

இரசவாதக் கலையின் தந்தை

இவர் காலத்தில் மிகப்பிரபலமாகப் புகழ்பெற்று விளங்கிய இரசவாதக் கலையில் மிகச் சிறந்து விளங்கினார். பல புதிய நுட்பங்களை ஆராய்ந்து கண்டுபிடித்தார். அதன்மூலம் செயற்கை முறையில் உலோகத் தன்மை கொண்ட பொருட்களை உருவாக்கும் இரசவாதக் கலையை பெரும் முன்னேற்றம் காணச் செய்தார். இவர் இன்னும் எத்தனை யெத்தனையோ வேதியியல் கண்டுபிடிப்புகளை வெளியாக்கி, இரசாயனத் துறையின் மாபெரும் வளர்ச்சிக்கு வழிகோலினார். தனது வேதியியல் கண்டுபிடிப்புகளைப் பற்றி ஐந்து நூல்களை எழுதியுள்ளார் இத்துறையின் பல்வேறு அம்சங்களை அலசிஆராயும் நூல்களாக