பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/76

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

ஒருவர் ரேஸஸ் என மேனாட்டாரால் அழைக்கப்படும் அல்-ராஸி. மற்றொருவர் அவிசென்னா என அழைக்கப்படும் இப்னு சினா ஆவார். இன்றும் பாரிஸ் பல்கலைக்கழகம் உட்பட பல மருத்துவப் பல்கலைக் கழகங்களிலும் மருத்துவக் கல்லூரிகளிலும் இவ்விருவரின் படங்கள் அலங்கரித்துக் கொண்டிருப்பதைக் காணலாம்.

இவ்விருவரில் முந்தையவராகக் கருதப்படுபவர் அல்ராஸியாவார். கி.பி. 86 இல் பிறந்த இவர் 925 இல் மறை வெய்தினார். இவர் புகழ்பெற்ற மருத்துவ வல்லுநராயினும் இஸ்லாமிய மார்க்கத் தத்துவம் இரசாயனம்,கணிதம், வானவியல் மற்றும் அக்காலத்தில் மிகவும் பிரபலமாக விளங்கிய இரசவாதக் கலை ஆகியவற்றிலும் விற்பன்னராக விளங்கினார். இத்துறைகள் அனைத்தையும் பற்றி இவர் பலப்பல நூல்களை எழுதினார்.மருத்துவ இயல் பற்றி சிறிதும் பெரிதுமாக சுமார் 140-க்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். குழந்தை நோய்பற்றி முதன் முதலாக விரிவாக நூல் எழுதியவர் இவரேயாவார்.

மனோதத்துவ மருத்துவ முறை

அக்காலத்தில் முஸ்லிம்களின் முழுமையான ஆளுகைக்குட்பட்ட ஸ்பெயினில் கார்டோபாலை நிலைக்களனாகக் கொண்டு வாழ்ந்த இவ்வறிஞரின் மருத்துவ நூல்கள் அனைத்தும் லத்தீன் மொழியில் மாற்றம் செய்யப்பட்டன. பின்பு அதிலிருந்து ஐரோப்பிய மொழிகளுக்குப் பெயர்க்கப்பட்டன.

மருந்துகளால் மட்டுமல்லாது மனோதத்துவ முறையிலும் ஒருவருடைய நோயைக் குணப்படுத்த முடியும் எனக்கூறி அம்முறையிலும் நோயைப் போக்கியும் வந்தார்

சின்னம்மை பெரியம்மை நோய்கள்

அன்று சின்னம்மை நோயையும் பெரியம்மை நோயையும் ஒன்றாகவே கருதினர். அவற்றிடையே எவ்வித வேறு