பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/77

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

67

பாடும் தெரியவில்லை. ஆனால், அவ்விரு நோய்களுக்கும் இடையேயுள்ள வேறுபாடுகளை முதன்முதலாக அறிவியல் அடிப்படையில் கண்டறிந்து கூறியவர் அல்-ராளியேயாவார், அத்துடன், இவ்விருவகை அம்மை நோய்க்கான காரணங்களையும் இவரே கண்டறிந்து கூறினார். இதை இவர் இரத்தப் பரிசோதனை முறை மூலமும் கண்டறிந்தார். இந்நோய்கள் தோன்றுவதற்கு அடிப்படைக்காரணம் ஒருவகை நச்சுக் கிருமிகளே என்பதை எண்பித்தார். இதிலும் இவரே முதல் மருத்துவராக விளங்குகிறார் ஒருமுறை பெரியம்மை கண்டால் மறுமுறை அந்நோய் வராது என முதன் முதல் கண்டறிந்து கூறியவரும் இவரே.

மருத்துவர்களின் இளவரசன்

இஸ்லாமிய ‘மருத்துவ வளர்ச்சிக்கு மாபெரும் உந்து சக்தியாக அமைந்த மற்றொருவர் மருத்துவர்களின் இளவரசன்’ என மருத்துவ உலகால் போற்றிப் புழப்படும் அலி இப்னு சினா ஆவார். இவர் அவிசென்னா என்றும் அழைக்கப்படுகிறார்.

கி.பி. 980 ஆம் ஆண்டில் பொக்காரோவில் பிறந்த இப்னு சினா சிறு வயதிலேயே இஸ்லாமியத் திருமறையைத் தெளிவாகக் கற்றறிந்தவர். ‘கண்டது கற்கப் பண்டிதன் ஆவான்’ என்ற பழமொழிக் கொப்ம இவர் சிறு வயதில் படிக்கக் கிடைக்கின்ற நூல்கள் எதுவாயினும் அதனைப் படித்து முடிப்பது இவரது இயல்பாகும். படிப்பதில் அவ்வளவு பேரார்வமுடையவராக விளங்கினார்.இதன் விளைவாக அவர் வயது ஏற ஏற பல்துறை அறிவும் அவரிடம் பொங்கிப் பொழியத் தொடங்கியதெனலாம்.ஆன்மீகத் துறையிலும் தத்துவச் சிந்தனைகளிலும் பேரார்வம் கொண்டிருந்த இவர் மருத்துவம், இயற்பியல்,வேதியியல், வானவியல் போன்ற துறைகளில் உறித்திளைத்தார் என்றே கூற வேண்டும்?