பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/83

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

73

காசுகள் செலவழிக்கப்பட்டுவிடும். ஆனால், அறிவியல் என்றென்றும் வாழும் பெற்றியுடையது. இஃது அறிஞர் பெரு மக்கள் அனைவரும் அறிந்த ஒன்று, குறுகிய வாழ்நாளையுடையதும் அலங்கோலமானதும் ஒளிரும் தன்மையுடையதுமான வெள்ளிக்காசுகளுக்குப் பகரமாக, என்றும் நிலைத்து வாழ வல்ல அறிவியல் அறிவினை மாற்றாகத் தர விரும்பவில்லை. இதற்கு நான் ஒரு நாளும் இசைய மாட்டேன்,” எனக் கூறி மறுத்துவிட்டதாக அவரது வாழ்க்கைச் சுவடி கூறுகிறது.

அறிவியலின் பல்துறைத் திறமை

அல் - பிரூனி கணிதம், வானவியல். நிலவியல், இயற்பியல், நில அளவையியல் ஆகியவற்றில் ஆராய்ச்சி செய்து பல புதிய கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்தினார்.மருத்துவத் துறைக்கும் இவர் பெரும் பங்களிப்பைச் செய்துள்ளார் என்பதற்கு இவர் தொகுத்த ‘மருந்தியல்’(Pharmacology) நூல் சிறந்த சான்றாக உள்ளது. இதில் இவர் பல்வேறு வகையான மூலிகைச் செடி, கொடிகளையும் மருந்துக்குதவும் விலங்குகள், கனிமங்களைப் பற்றிய தகவல்களையும், அவற்றிலிருந்து மருந்து தயாரிக்கும் முறைகளையும் திறம்பட விளக்கியுள்ளார். இதில் பலநூறு அராபிய மூலிகைப் பெயர்களோடு 900 பாரசீகப் பெயர்களையும் 700-க்கு மேற்பட்ட கிரேக்கச் சொற்களையும் 350 இந்திய மூலிகைப் பெயர்களையும் தொகுத்துள்ளார்.

பன்னூலாசிரியர் அல் - பிருனி

அல் பிரூனி எழுதியுள்ள நூல்களின் மொத்த எண்ணிக்கை 150-க்கு மேலாகும். இதற்றுள் வானவியல் பற்றிய நூல்கள் சுமார் 70 ஆகும். இவர் எழுதிய கணித நூல்கள் 20-க்கு மேலாகும். வானவியலையும் அதனோடு இணைந்த பல்வகை அறிவியற் கலைப் பிரிவுகளின் தகவல்களடங்கிய முழுமையான கலைக்களஞ்சியமே ‘மாசுடிக்