பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/85

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

75

வாக்குள்ளவராக ஆனார். அப்போது அமீர் அரண்மனையில் அறிவுக் களஞ்சியம் போன்று அமைந்திருந்த புகழ்பெற்ற மாபெரும் நூலகத்தை முழுமையாகப் பயன்படுத்தி தன் மருத்துவ அறிவியல் அறிவைப் பெருக்கிக்கொண்டார்.

இதைப்பற்றி இப்னு சினா, “பதினெட்டு அல்லது பத்தொன்பது வயதிற்குள்ளாகத் தத்துவ அறிவு முழுவதையும் காரண நியாயக் கருத்தியல், இயற்பியல், கணக்கியல்.வடிவியல், எண கணக்கியல், வானவியல், இசை, மருத்துவம் எனும் பற்பல துறைகளைப் பற்றி நன்கு தெரிந்தவனாக என்னை நான் ஆக்கிக் கொண்டேன். ஆதால். எனக்கு ஆசானாக இருக்கக் கூடிய எவரையுமே நான் சந்திக்கவில்லை.” என்று தன் மாணவர் ஜூஸ் ஜானியிடம் கூறியதாகச் சொல்லப்படுகிறது.

எதிர்பாரா நிலையில் புக்காரா நூல் நிலையம் எரிந்தபோது, அதற்காக அதிகம் வருந்தாத மக்கள் ‘அந்நூலகம் எரிந்து அழிந்து விடவில்லை’ அறிஞர்கள் இளவரசனாக விளங்கும் இப்னு சீனாவின் மூளைக்குள் மாற்றலாகியுள்ளது எனக் கூறுவார்களாம்!

479 நூல்களை எழுதிக் குவித்த அறிவுலக மாமேதை

ஐம்பத்தேழு வயதுவரை மட்டுமே வாழ நேர்ந்தாலும் இப்னு சினா அவ்வப்போது தன் கருத்துக்களை கண்டுபிடிப்புகளை எழுதி வைக்கத் தவறவில்லை தன் வாழ்நாளில் அரபி மொழியில் 456 நூல்ல்ளையும் பாரசீக மொழியில் 23 நூல்களையும் எழுதியுள்ளதாக அவர் வாழ்க்கை வரலாற்றை நான்கு ஆய்ந்த பாரசீக அறிஞர் சையத் நஃபீசி என்பார் பட்டியல் தயாரித்து வழங்கியுள்ளார். எனினும், உலகெங்கும் உள்ள பெரும் நூலகங்களில்