பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/87

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

77

அறிவியல் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்கனவாக அறிவியல் வரலாற்றாசிரியர்களால் கணிக்கப்படுகிறது. அன்றைய அடிப்படை உண்மைகளின் எந்த அளவுக்கு ஞானம் உள்ளவர்களாக இருவரும் விளங்கினார்கள் என்பதை அறிய முடிகிறது.

ஆயிரம் ஆண்டுகட்டு முன்பு நடைபெற்ற அறிவியல் விவாதம்

அறிவியல் ஆய்வுகள் சரியான போக்கில் முளை விட்டிருந்த ஆயிரம் ஆண்டுகட்கு முன்னர், விஞ்ஞான வளர்ச்சியின் தொடக்காலகட்டத்தில் இரு முஸ்லிம் அறிவியல் அறிஞர்களிடையே விஞ்ஞான விவாதம் எவ்வளவு நுட்பமாக நடைபெற்றுள்ளது என்பது வியப்பாகவும் அதே நேரத்தில் சுவையாகவும் உள்ளது. இவ் விதாதங்கள் நடைபெற்றபோது அல் - பிரூனிக்கு வயது 24, இப்னு சினாவுக்கு வயது 17.

அவ்வாறு நடைபெற்ற அறிவியல் வினா - விடை விவாதங்களில் ஓரிரண்டைக் காண்போம்.

இவ்வுலகில் அகத்திலும் புறத்திலும் வெற்றிடம் இல்லையெனில் ஒரு குடுவையினுள்ளிருக்கும் காற்று வெளியே உறிஞ்சப்படும் போது தண்ணீர் ஏன்! அதனுள் ஏறுகின்றது’ என அல் புரூனி வினவுகிறார். ‘இது வெற்றிறிடம் காரணமாக நீர் ஏறுகிறது இப்னு சினா நீரின் குளிரால் குடுவையுள்ளிருக்கும் காற்றுச் சுருங்குகிறது. அதனால் குடுவையினுள் தண்ணீர் ஏறலாம் என்பது இப்னு சினா வின் விளக்கம்.

பொருள்கள் வெப்பத்தால் விரிகின்றன என்பதும் குளிரால் சுருங்குகின்றன என்பதும் சரியானால் நீர் நிரம்பிய குடுவை ஒன்று அந்நீர் உறையும் போது ஏன் உடைகின்றது எனக் கேட்கிறார் அல்-பிரூனி. இதற்கு மறுமொழியாக