பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/93

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

83

பூச்சித் தொல்லைகளிலிருந்து தாவரங்களைக் காப்பது என்பதைக் கண்டறிந்தார்கள். அதேபோன்று பயிர்களுக்கு ஏற்படும் பலவித நோய்களைப் போக்கும் வழிமுறைகளையும் மருந்துகளையும் கண்டுபிடித்து தாவரங்களைக் காக்க வழி வகுத்தார்கள்.

ஓட்டு முறையில் புதுப்புது மலர் புதுப்புதுப் பழம்

இன்றைக்குப் புதுவகைப் பயிர்களையும் புதுவகை மலர்களையும் சுவையூட்டும் புதுப்புது பழவர்க்கங்களையும் கலப்பின அடிப்படையில் உருவாக்கித் துய்த்து வரும்கிறோம். ஆனால், தாவரவியல் ஆராய்ச்சியில் முஸ்லிம் ஆய்வாளர்கள் மும்முரமாக ஈடுபட்டிருந்த அன்று மலர்ச் செடிகளிலிருந்து ஓட்டு முறையில் புதுப்புது மலர்களையும் மரங்களிலிருந்து கலப்பின அடிப்படையில் புதுப்புதுப் பழங்களைப் பெறும் முறைகளையெல்லாம் கண்டறிந்திருந்தார்கள் என்ற செய்தி அன்று அவர்கள் எழுதி வைத்துள்ள நூல்களிலிருந்து அறிய முடிகிறது. இத்தகைய விவசாய விந்தைகளைச் செய்ய தாவரங்களைப் பல்வேறு நாடுகளிலிருந்து கொண்டு வந்து ஒட்டுக் கலப்பின முறைகள் மூலம் பலவிதப் புதுரகங்களை உருவாக்கினார்கள் என்பது வரலாறு.

எண்ணெய் பிழிந்தெடுக்கும் புதுமுறை கண்டவர்கள்

எண்ணெய் வளமிக்க ஆலிவ் மரப்பழங்களிலிருந்து எண்ணெய் பிழிந்தெடுக்கும் புது முறைகளை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களேயாவர், அரபு நாடுகளிலிருந்து ஆலிவ் மரங்களை அன்று முஸ்லிம்களின் ஆட்சியின் கீழிருந்த ஸ்பெயினுக்குக் கொண்டு சென்று அறிமுகப்படுத்தியவர்கள் முஸ்லிம்களே யாவர். இதன்மூலம் ஸ்பெயின்