பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7. இராமபக்தன்

"கற்பார் இராமபிரானை அல்லால்

மற்றும் கற்பரோ?"

என்கின்றார், நம்மாழ்வார். இராமனை நினைக்கும்போது அவன் பிறந்து, வளர்ந்து, அரசாண்ட நகரமாகிய அயோத்தி நகர் நினைவிற்கு வருகின்றது. இன்று அயோத்தியில் மட்டும் 2700 இராமர் கோயில் இருப்பதாகச் சொல்லுகின்றனர்: இராமபக்தி ஆழ்வார்கள் காலத்தில் இமயம்போல் உயர்ந்தது; ஆசாரியர்கள் காலத்தில் இமயத்தின் கொடுமுடி போல் உயர்ந்தது.

"இராமனது மெய்யும் கிருட்டிணனது பொய்யும்

நமக்குத் தஞ்சம்.” 'சிறை இருந்தவள் ஏற்றம் சொல்லுவது இராமாயணம்.”

என்ற திருமறைச் சொற்றொடர்கள் போன்ற சொற்றொடர்கள் தோன்றி, வைணவர்கள் நாக்கில் தாண்டவமாடுகின்றன.

அடியேன் அயோத்தியில் தங்கிப் பல இடங்களைச் சுற்றிப் பார்க்கும்போது இராமபக்தியைப்பற்றி அங்கு நிலவும் சான்றுகள் :

(1) ஒரு மசூதி : இஸ்லாமியர்கள் படையெடுப்பின் பொழுது பழைய திருக்கோயிலை இடித்து அவ்விடத்தில்

1. திருவாய், 7.3:1

2. 1968இல் என் வடநாட்டுத் திருத்தலப் பயணத்தின்போது அயோத்தியில் ஒரு வாரம் தங்கியிருந்து, விஷ்ணு கயை, புத்த கயை முதலான இடங்கட்குச் சென்று, பல செய்திகளை அறிந்த காலம் அது. ஒவ்வொருவரும் இல்லத்தில் இராமமூர்த்தியை வழிபடுவதும் இக்கணக்கில் அடங்கும். திருவயோத்தியில் இராமபக்தி உச்ச நிலையில் உள்ளது என்பதை இது காட்டுகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணல்_அநுமன்.pdf/132&oldid=1361302" இலிருந்து மீள்விக்கப்பட்டது