பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இராமபக்தன் 137

அநுமனது சிந்தையில் எவ்வாறு இடம் பெற்றுள்ளான் என்பதை அவனது வருணனை காட்டுகின்றது. அரங்கனின் திருமேனியைப் பாதாதி கேசமாகக் கண்டு அநுபவித்த திருப்பாணாழ்வார்

"நீலமேனி ஐயோ! நிறை

கொண்டதுஎன் நெஞ்சினையே!" "கொண்டல் வண்ணனைக்

கோவலனாய் வெண்ணெய்

உண்ட வாயன்என்

உள்ளம் கவர்ந்தானை அண்டர் கோன்அணி

அரங்கன்என் அமுதினைக் கண்ட கண்கள்மற்று

ஒன்றினைக் காணவே என்று கூறிக் களிப்பார். அநுமனது இராமன் திருமேனி வருணனையையும், அடையாள மொழிகளையும் கேட்ட பிராட்டி அடைந்த மகிழ்ச்சியைக் கம்பநாடன் இவ்வாறு காட்டுவான் :

"இறந்தவர் பிறந்தபயன்

எய்தினர்கொல் என்கோ? மறந்தவர் அறிந்துஉணர்வு

வந்தனர்கொல் என்கோ? துறந்தவுயிர் வந்துஇடை

தொடர்ந்ததுகொல் என்கோ? திறந்தெரிவது என்னைகொல்

இந்நன்னுதலி செய்கை?"


இழந்தமணி புற்றுஅரவு

எதிர்ந்தது.எனல் ஆனாள்;

பழந்தனம் இழந்தன

படைத்தவரை ஒத்தாள்;

திருவபிடேகம்வரை காட்டியதையும், திருப்பாணாழ்வார் அரங்கத் தம்மானின் கமலபாதம் முதல் திருமுடிவரை காட்டியதையும் நினைவு கூரலாம் (அமலனாதிபிரான்)

16. முதல்ாயிரம் - அமலனாதி - 9

17. முதலாயிரம் - அமலனாதி - 10

18. சுந்தர. உருக்காட்டு - 64

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணல்_அநுமன்.pdf/138&oldid=1361314" இலிருந்து மீள்விக்கப்பட்டது