பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/15

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14 அண்ணல் அநுமன்

இராமசரிதம் நடைபெறுகிற முறையில் அமைந்து விட்டால் (அதுமன் இல்லாவிட்டால்) அது துன்ப நிலையில் முடிவதாக அமைந்திருக்கும். கவிக்கு நாயகனான அநுமனே அதில் நடைபெற்ற கோணல்களை நிமிர்த்திக் (திருத்தி என்பதற்குத் திருந்தச்செய்து என்று பொருள் கொள்ள வேண்டும்) கதை மங்களகரமாக முடியக் காரணமாக இருந்தவன் என்பது மூன்று.

இந்த மூன்றாவது கருத்தை ஆழ்ந்து சிந்திப்பதே இப்பகுதியின் நோக்கம்.

(1) இராம - சுக்கிரீவ நட்பு : இராமகாதையில் இஃது உயிராய ஏற்பாடு. இந்த ஏற்பாட்டை மிக்க சாமர்த்தியமாகச் செய்தவன், அநுமன். முதலில் வாலி அரசு ஒன்றுதான் இருந்தது. சகோதரர்களிடையே கருத்து மாறுபாடு ஏற்பட்டது. ஒருசமயம் வாலி தன் தம்பி சுக்கிரீவனைக் கொல்லவே நினைத்தான். அதனால் சுக்கிரீவன், அதுமன் உட்பட சில நல்ல வானரர்களுடன் கிட்கிந்தையை விட்டு வெளியேறி, ஒரு முனிவர் சாபத்தால் வாலி புகமுடியாத ருசியமுக பர்வதம் என்ற பகுதியில் வாழ்ந்து வருகின்றான். இராமலக்குமணர்கள் பிராட்டியைத் தேடிக்கொண்டு அவ்வழியாக வந்தபோதுதான் இந்த நட்பு ஏற்படக் காரணமாகின்றது; இதனை ஏற்படுத்தியவன் "தன் பெருங்குணத்தால் தன்னைத் தானலது ஒப்பிலாதான்" (அநுமப்-1) என்று கம்பனால் போற்றப்பெறும் மாருதி.

தன் அண்ணனால் நையப் புடைக்கப்பெற்ற சுக்கிரீவன் வாலியைச் சிம்ம சொப்பனமாகக்கொண்டு நடுங்கிக் கொண்டிருப்பவன். இராமலக்குமணர்கள் தானிருந்த மலை யின்மேல் ஏறி வருவதைக் கண்ட சுக்கிரீவன் வருகிற இருவரும் நமக்குப் பகைவர்கள் என எண்ணி அஞ்சி ஒடி அம்மலையின் குகையொன்றினில் ஒளிந்துகொள்ளு கின்றான்.

மாருதி சிறந்த சிந்தனைச் செல்வனாதலால் வானர வீரர்களுடன் சுக்கிரீவன் இருக்குமிடம் அடைந்து, வந்து கொண்டிருக்கின்ற வீரர்கள் இருவரும் வாலியின் ஏவலால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணல்_அநுமன்.pdf/15&oldid=1509139" இலிருந்து மீள்விக்கப்பட்டது