பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

160 அண்ணல் அதுமன்

கொல்வதற்கேற்ற வலிமை இவனுக்கு உளதென்பதை நீயே தெளியலாம்.'

இவ்வாறு கூறி அநுமன் இராமனது வலிமையில் நம்பிக்கை வருமாறு செய்தான்.

இங்குக் காட்டப்பெற்ற முப்பெருங் குணங்களால் அநுமன் நமக்கு ஒரு குணக்குன்றனாகக் காட்சி அளிக்கின்றான். இன்னும் அவனுடைய குணநலன்களைப் பலவாறு விரித்துரைக்கலாம். அப்படி விரித்துரைத்தால் அஃது அவனுடைய வால்போல் நீளுமாதலால், அதில் ஈடுபடவில்லை.

55. கிட்கிந்தை - நட்புக்கோள். 83. மராமரங்கள் ஏழும் ஊழிக்கால முடிவிலும் அழியாதவை; சத்திய லோகத்தில் வாழும் நான்முகனும் அவற்றின் உச்சியை அறிய முடியாது. பகலவனின் தேர்க்குதிரைகள் ஓயாமல் ஒவ்வொரு நாளும் ஒடுவனவாயிருந்தும், இளைப்பு அடையாமைக்குக் காரணம், இம்மர நிழலின் வழிச் செல்வதனாலாகும். இம்மரங்கள் ஆகாய கங்கைக்கும் மேல் உயர்ந்துள்ளன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணல்_அநுமன்.pdf/161&oldid=1360827" இலிருந்து மீள்விக்கப்பட்டது