பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/7

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

முடியும். அருங்கலைக் கோனும் அங்ங்னமே தம் மருங்கணைந்த சீடனிடம் சீராட்டப் பணித்தார் கொல்லோ?

தமிழ்ச்செம்மல் ரெட்டியாரவர்களின் 121ஆவது நூலாக, மூன்றாயிரம் ஆண்டுத் தொடக்கத்தில் அவர்தம் முதல் நூலாக இந்நூல் வெளிவருவதும் இம்மையே, எழுமை நோய்க்கும் மருந்தாம், இராமன் என்னும் செம்மைசேர் நாமம் தன்னைத் தாரக மந்திரமாகக்கொண்ட அதுமனைப்பற்றியதாக வருவதும் காலங்கருதிய செயல்; காலத்தினாற் போற்றப்பெற வேண்டிய தொன்றுமாகும். அதிகாரம், ஆணவம், தலைமை வேட்கை, கய நலம், பன வெறி என்றிப்படிப் பலவும் மனிதர்களைப் பிடித்தாட்டி ஆட்கொண்டுள்ள இக்காலத்திற்குத் தேவை யானதாம். எப்படி?

பரம்பொருளாம் இராமனே போர் உதவிய திண்தோளால் பொருந்துறப் புல்லுக' என்று தொண்டனை அன்போ டழைத்துத் தலைவனைத் தழுவிக்கொள்ளச் சொல்லியும், அடிக்கீழ் இருந்து அரியனை தாங்கும் தொண்டே போதும் என்று நிறைந்த அநுமனின் தொண்டுள்ளமே இன்றைய சூழலில் பின்பற்ற வேண்டியதொன்றாகும்; முன்மாதிரியுமாகும். தலைவன் விரும்பித் தந்தாலும் பணிவுடனே அடித்தொண்டனாகி வாழ்ந்து காட்டிய அநுமனே, இன்றைக்கு - தலைவன் அயரும் நேரம் பார்த்துத் தானே தலைவனாகிவிடத் துணிவோர் நிறைந்த இன்றைக்கு தலைவர்களும் தொண்டர்களை அனுசரித்து அடங்கிப்போக வேண்டிய தொண்டர் நிறைந்த இன்றைக்கு - இளைய தலைமுறைக்கு, விதை நெல்லுக்கு முன்மாதிரியாய், வழிகாட்டியாய் விளங்க முடியும்.

கம்பன் பாத்திரம் சுவைசெய் பாவலன் ஆவான். பெரும் பாத்திரமோ, சிறிய ஒன்றோ, ஒரு காட்சியில் தோன்றி மறையும் பாத்திரமோ, எதனையும் சுவை குன்றாது ஒரே விதமான கலையழகுடன் படைக்கவல்ல கவிதைத் தச்சன். சீதா பிராட்டியை எவ்விதம் 'காந்தையருக்கு அணி எனக் காட்டினானோ அவ்விதம், அதற்கு ஒரு மாற்றும் குறையாது அவள் தோழியாய் ஒரே ஒரிடத்தில் வந்து போகும் நீலமாலையை யும் சுந்தரியாய்க் காட்டவல்ல ஒவியக் கவிஞன். அப்படிப்பட்ட கவிச்சக்கரவர்த்தி அதுமனைப் படைத்துக் காட்டும் விதம் ஒப்பற்றது. உடலாற்றல் நிறைந்த ஒருவன் அறிவாற்றலும் நிரம்பி யிருத்தல் உலக வழக்கில் அதிசயமே. கம்பன் அதுமனைப் பேரறிஞனாகவும், அதே சமயம் பெருவீரனாகவும் காட்டுகிறான். 'iங்கிய வீரன், வீரருள் வீரன், வெந்திறல் வீரன் என்றெல்லாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணல்_அநுமன்.pdf/7&oldid=1472397" இலிருந்து மீள்விக்கப்பட்டது