பக்கம்:அண்ணாமலை என்னும் அற்புத மனிதர்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

57 அற்புத மனிதர்



13. துயரம் ஒடைத்தவர்

பரிசுகள்; பாராட்டுகள்; இவற்றைப் பற்றி நினைக்க நேரமின்றி அண்ணாமலைச் செட்டியாரை கடமைகள் கை நீட்டி அழைத்தன.

அத்தனைக் காலம் இந்தியாவுடன் இணைந்திருந்த பர்மா தனியாகப் பிரிந்தமையால் நகரத்தார் பெரிதும் பாதிக்கப் பட்டனர்.

பர்மாவிலிருந்து இந்தியர்களின் பாதுகாப்பிற்காகச் சில நடவடிக்கைகள் எடுக்க வேண்டியிருந்தது.

பர்மாவில் இந்தியர்கள் ஒன்று கூடி முடிவு செய்து அண்ணாமலை அரசர் தலைமையில் ஒரு குழு, லண்டனிலிருக்கும் இந்திய நாட்டுச் செயலாளரோடு பேசுவதற்கென்று அனுப்பப்பட்டது.

அக்குழுவில் திரு. சூர்மா திரு. மிஸ்ரர் முகமது ரபி, திரு. எஸ்.எஸ். காஜி; திரு. கே. நாகராஜன் ஆகியோர் உறுப்பினராகச் சென்றனர்.

அக்குழுவினர் 1936-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இங்கிலாந்து சென்று இந்திய நாட்டுச் செயலாளர், உதவி செயலாளர், வின்டர்டன் பிரபு, கெயிலி பிரபு பாராளுமன்ற உறுப்பினர் ஆகியோரிடம், பர்மாவிலுள்ள இந்தியர் படும் துன்பங்களையும்; பிரச்சினைகளையும் எடுத்துக் கூறி அவற்றிற்குப் பரிகாரம் காணுமாறு வேண்டினர்.