இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
75 அற்புத மனிதர்
- அவற்றை -
- நாட்டு நலனுக்காவும்-
- நல் அறத்திற்காகவும்-
- கல்விக்காகவும்-
- வாரிஇறைத்த வள்ளல் அவர்.
அவர் உருவாக்கிய பல்கலைக் கழகமும் அவரால் உருப்பெற்ற தமிழ் இசை மன்றமும், எண்ணற்ற கல்விச் சாலைகளும், அளப்பரிய ஆலயத்திருப்பணிகளும், காலம் உள்ளளவும், கல்வெட்டுக்களாய் அவர் புகழ் பரப்பி நிற்கும்.
- தமிழ் நாடு-
- தமிழ் மொழி-
- தமிழ் மக்கள்-
உள்ளவரை, ராஜா சர்.அண்ணாமலைச் செட்டியாரின் புகழ் மங்காமல் ஒளி வீசிக் கொண்டிருக்கும்!
ராஜா அண்ணாமலை மன்றம், சென்னை.