பக்கம்:அண்ணாமலை தீபம் 2001.pdf/4

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பாபநாசம் குறள்பித்தன்


அருள் தீப மலை ...


இனிய ஆன்மீக அன்பர்களே வணக்கம்.


இந்த நூலை எழுதத் தொடங்கும் முன், என் இதயம் வெற்றுஇடமாக இருந்தது. எழுதத் தொடங்கியதும் வெற்றிஇடமாக மாறியது. அது எப்படி?.. எல்லாம் அண்ணமாலையானின் அருளே என்று இப்போது உணர்கிறேன்.

பல நூல்களை எழுதியுள்ள எனக்கு, 'அண்ணாமலை' என்று எழுதத் தொடங்கியதும் புத்துணர்வும், புதுப்பொலிவும் ஏற்பட்டது.

எழுதிய படிகளை நண்பர் திரு. இரா. முருகானந்தம் அவர்களிடம் கொடுத்தேன். படித்துப் பார்த்தவர் பரவசப்பட்டு இந்த நூலை வெளியிடுகிறேன் என்று வாங்கிச் சென்றார். அதன்படியே இப்போது சிறப்பாகவே வெளியிட்டும் இருக்கிறார். நன்றி!

இந்த நண்பரை என் ஊர்க்கார தம்பியும் கவிஞருமான கி. முத்துக்குமரன் அறிமுகப்படுத்தினார். அதோடு இந்த நூல் வெளிவர துணையாகவும், தூணாகவும் நின்றவர் இவரே. அதற்காக இந்த இனிய வேளையில் இவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நூலில் அண்ணாமலையானைப் பற்றிய செய்திகளோடு, உலகம் முழுதும் நிறைந்துள்ள காற்றைப்போல், உலகம்முழுதும் நின்று ஆட்சிசெய்து கொண்டிருக்கும் ஈசனின் செய்திகளையும், அவனது பெருமைகளையும் இங்கே கொடுத்திருப்பதே சிறப்பானதாகும் என்றே நம்புகிறேன்.

இந்த அளவில் சிவனை, ஈஸ்வரனை யாரும் தொகுத்து சொல்லி இருக்கமாட்டார்கள் என்பதை இந்நூலைப் படிப்பவர்கள் நன்கு அறிவார்கள்.

அண்ணாமலையானை நினைப்போம்

அவனருளில் திளைப்போம் !

52, பக்தவத்சலம் காலனி முதல்தெரு, சென்னை - 600026.

நட்புடன் ‘பித்தன்’ 2001-11-26