இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
திருவண்ணாமலை
அருவி பிறக்கும் சில மலையில், அகில் பிறக்கும் சில மலையில், அண்ணாமலையிலோ அருள் சுரக்கும், அன்பு மணக்கும், எப்போதும்!
தேன் இனிக்கும். என்பதும் மலர் மணக்கும் என்பதும் எப்படி உண்மையோ அப்படியே அண்ணாமலையானின் சிறப்பும், உயர்வும், அன்பும், அருளும் உண்மையானது, தன்மையானது,