ஓம்
இன்பமானது. இவ்வுலக வாழ்வில் இனிதானது, புகழானது, புனிதமானது.
நமக்கெல்லாம் இதயம் கையளவுதான், ஈஸ்வரனின் இதயமோ அன்பு மலையாக அண்ணாமலையாகவே இருக்கிறது.
அதனால்தான், இந்த இதயத்தை நோக்கி - அண்ணாமலையை நோக்கி அகிலம் முழுதும் இருந்தும் ஆன்மீக இதயங்கள் அருள்வேண்டி வருவதைக் கண்ட ரமண மகரிஷி, "உலகத்தின் இதயம் அண்ணாமலை” என்று சொன்னார்.
தேவாரத்தில் சம்பந்தர் அண்ணாமலையின் தலவரலாற்றை இப்படி விளக்குகிறார் :
உண்ணாமுலை யுமையாளொடு
முடனாகிய வொருவன்
பெண்ணாகிய பெருமான்மலை
திருமாமணி திகழ
மண்ணார்ந்தன வருவித்திரள்
மழலைம் முழவதிரும்
அண்ணாமலை தொழுவார்வினை
வழுவாவண்ண மறமே.
இத்தலம், பஞ்சபூத தலங்களுள் நடுநாயகமான அக்கினித் தலமாகவும், ஆறு ஆதாரத்தலங்களுள் பூரகத்தலமாகவும், முக்தி தலங்கள் நான்கினுள் நினைத்த மாத்திரத்தில் முக்தி தரவல்லதாகவும், நடுநாட்டுச் சிவத்தலங்கள் இருபத்திரண்டினுள் 22-வதாக எண்ணப்படுகிறது மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூவகையிலும் சிறப்புடைய தலமாக திருவண்ணாமலை திகழ்கிறது.
அருவுருத் திருமேனியான லிங்க வடிவில் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட வெளிச்சமலையாக சிறப்புப்பெற்று விளங்கும் தலமாக திருவண்ணாமலை புகழ் பெற்றிருக்கிறது.
ஒவ்வொரு மனிதரும் தம் வாழ்வில் பெற விரும்பும் பேறுகளில் முன்நிற்பது முக்தி பேறுதான். ஒருவர் உள்ளத்தில் நினைத்த அளவிலேயே தாய் நிலையில் இருந்து முக்தி அளிக்கும் சிறப்பிற்கும், உயர்விற்கும் உரிய மலை திருவண்ணாமலையே!
4
அருள் வழங்கும் தெய்வமே அண்ணாமலை தீபமே